வசூல்ரீதியாக தட்டித் தூக்கிய த்ரிஷாவின் டாப் 5 படங்கள் - ஓர் பார்வை
இன்று (மே 5) த்ரிஷாவின் பிறந்த நாள். 1983ல் பிறந்தார். த்ரிஷா கிருஷ்ணன் தான் இவது இயற்பெயர். 1999ல் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் ஜோடியாக வந்து அறிமுகமானார். மௌனம் பேசியதே படத்தில் பேசலாமே என்ற ஒற்றை வார்த்தையில் ரசிகர்களைக் கிறங்கடித்தார்.
மனசெல்லாம், லேசா லேசா, வர்ஷம் என மென்மையான கதாபாத்திரங்களில் மிளிர்ந்த த்ரிஷா கில்லி படத்தில் அதிரடியான வேடத்தில் நடித்தார். படம் முழுக்க ஹீரோ விஜயுடன் சேர்ந்து ஓட்டம் ஓட்டமாய் ஓடுவார். கில்லியிலும், திருப்பாச்சியிலும்; விஜய்க்கு இணையாக குத்தாட்டம் போட்டு கலக்கியிருப்பார். மௌனம் பேசியதே படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றார்.
20 வருஷத்துக்கு மேல் ஹீரோயினாக நடித்துள்ளார். 20 வருடங்கள் நடித்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்தே 60 படங்கள் தான் இதுவரை நடித்துள்ளார்.
ஆனால், தமிழில் மட்டும் 35 படங்கள் நடித்துள்ளார். அவற்றில் இருந்து வணிகரீதியாக ல் வெற்றி பெற்ற டாப் 5 படங்களைப் பார்க்கலாம்.
விண்ணைத்தாண்டி வருவாயா
2010ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கௌதம் மேனன். ஏ.ஆர்.ரகுமானின் கலக்கலான இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. சிலம்பரசன், த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்ததாக சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
மென்மையான தீவிர காதல் கதை அம்சம் கொண்ட இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஓமனப்பெண்ணே, அன்பில் அவன், விண்ணைத் தாண்டி வருவாயா, ஹோசானா, கண்ணுக்குள் கண்ணை, மன்னிப்பாய, ஆரோமலே ஆகிய பாடல்கள் செமயாக இருந்தன.
சாமி
2003ல் வெளியான படம் சாமி. ஹரியின் இயக்கத்தில் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. விக்ரம், த்ரிஷா, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் கோட்டா சீனிவாச ராவ் வில்லனாக வந்து மிரட்டியிருப்பார்.
த்ரிஷா அழகுப்பதுமையாக ஜொலிப்பார். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் சூப்பர். திருநெல்வேலி அல்வாடா, இது தானா, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு, புடிச்சிருக்கு, வேப்பமரம் ஆகிய பாடல்கள் உள்ளன.
மங்காத்தா
2011ல் வெளியான அதிரடி படம் இது. அல்டிமேட் ஸ்டார் அஜீத்துடன் இணைந்து த்ரிஷா நடித்தார். அர்ஜூன், ஆண்ட்ரியா, லட்சுமிராய், அஞ்சலி ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
விளையாடு மங்காத்தா, நீ நான், வாடா பின் லேடா, மச்சி ஓப்பன் தி பாட்டில், நண்பனே, பல்லே லக்கா, விளையாடு மங்காத்தா ஆகிய பாடல்கள் உள்ளன.
திருப்பாச்சி
2005ல் வெளியான இந்தப்படத்தில் விஜய், த்ரிஷா, சாயாசிங் உள்பட பலர் நடித்துள்ளனர். பேரரசு இயக்கத்தில் தீனா இசையில் பாடல்கள் அனைத்தும் செம சூப்பர். இது ஒரு அதிரடி திரைப்படம்.
நீ எந்த ஊரு, கும்பிட போன தெய்வம், கண்ணும் கண்ணுதான், என்ன தவம், அவிச்சு வச்ச, கட்டு கட்டு, அப்பன் பண்ண தப்புல ஆகிய பாடல்கள் உள்ளன.
கில்லி
2004ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் தரணி. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு மெகா ஹிட்டான அதிரடி திரைப்படம். வித்யாசாகரின் இசை படத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.
சரவண வேலுவாக வரும் விஜயும், தனலெட்சுமியாக வரும் த்ரிஷாவும், முத்துப்பாண்டியாக வரும் பிரகாஷ்ராஜூம் மறக்க முடியாத கேரக்டர்கள். கபடி கபடி, அர்ஜூனரு வில்லு, ஷா லா லா, அப்படி போடு, சூர தேங்கா, கொக்கர கொக்கரக்கோ ஆகிய பாடல்கள் மாஸ் ரகங்கள்.