100வது படத்தில் விஜய்.! தயாரிப்பு நிறுவனம் யாரு தெரியுமா.? இப்போவே ட்ரெண்டிங்கா.?
சினிமாவில் அனைத்து, பிரபலங்களும் , நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம் , இசையமைப்பாளர் என பலரும் தங்கள் ஒவ்வொரு படத்தையும் தேர்ந்த்டுத்து நடித்து வருவர். அதனை விட ஜாக்கிரதையாக தங்களது 25வது 50வது 100வது திரைப்படத்தை தேர்ந்தெடுப்பர்.
ஒன்று அந்த படம் மாஸ் படமாக எதிர்பார்ப்பார்கள். அல்லது நடிப்புக்கு முக்கிய துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுப்பர். அப்படித்தான் ரஜினிக்கு 100வது படமாக ராகவேந்திரா , கமலுக்கு 100வது திரைப்படம் ராஜபார்வை, அஜித்திற்கு 50வது திரைப்படம் மங்காத்தா , விஜயகாந்திற்கு 100வது படமாக கேப்டன் பிரபாகரன் என அனைத்தும் பேர் சொல்லும் படங்களாக அமைந்தன.
அதே போல தான் தயாரிப்பு நிறுவனத்திற்கும், அப்படி ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் தான் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம், பூவே உனக்காக, நாட்டாமை, சூர்ய வம்சம் என பிளாக் பஸ்டர் படங்களையும், பல்வேறு சூப்பர் ஹிட் படங்களையும் தயாரித்த இந்த நிறுவனம் தங்களது 100து திரைப்படத்தை நோக்கி செல்கிறது.
இதையும் படியுங்களேன் - அனுபமாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.?! ரசிகர்கள் செயலால் தர்ம சங்கடமான 'அந்த' சம்பவம்.!
இந்த 100 வது திரைப்படத்தை பெரிய ஹீரோ படமாக , பெரிய பட்ஜெட் படமாக எடுக்க நினைத்து, தளபதி விஜயிடம் கால்ஷீட் கேட்டுள்ளனராம். விஜயும் இதற்கு இசைந்ததாக தெரிகிறது. ஆனால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட திரைப்படங்களை முடிக்க ஒரு வருடம் ஆகிவிடும் என்பதால் சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படம் அறிவிக்க அடுத்த வருடம் ஆகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் அந்த படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.