நடிப்புன்னு வந்துட்டா நாங்க எல்லாம் சிங்கம்டா.... 80ஸ் கதாநாயகிகளின் மெர்சலான படங்கள்

by sankaran v |   ( Updated:2024-02-20 16:24:30  )
RK, Anushka
X

RK, Anushka

ஹீரோக்கள் மட்டும் தான் நடிப்பில் பட்டையைக் கிளப்புவார்களா? நாங்களும் தான் என்று வரிந்து கட்டிக் கொண்டு அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் தனக்குக் கிடைத்த கேரக்டர்களை அப்படியே செதுக்கி உள்ள நடிகைகள் தான் 80ஸ் கதாநாயகிகள். இவர்கள் நடித்த படங்களை நாம் இப்போது பார்த்தாலும் அவர்களது நடிப்பு மீண்டும் மீண்டும் நம்மைப் பார்க்கத் தூண்டிவிடும். இந்தப் படங்களைப் பார்க்கும்போது இவரது பெயர் கூட நமக்கு மறந்துவிடும். இவர் நடித்த கதாபாத்திரம் தான் நம் கண் முன்னால் வந்து நிற்கும். யார் யாரென்று பார்க்கலாமா...

ரம்யா கிருஷ்ணன்

படையப்பா படத்தில் நீலாம்பரியாக வந்து வெளுத்து வாங்குவார் நடிகை ரம்யா கிருஷ்ணன். படத்தில் ரஜினிக்கே டஃப் கொடுத்து இருப்பார் இவர். 18 ஆண்டுகள் கழித்து நீலாம்பரி படையப்பாவை பழிவாங்க புலி போல அறையை விட்டு வெளியே வருவார்.

அந்தக் காட்சிகளும், அதைத் தொடர்ந்து படையப்பாவை வீட்டுக்கு வரவழைத்துப் பேசும் காட்சிகளும் செம மாஸ். அதிலும் ரஜினியை சொடக்கு அடித்துக் கூப்பிடும் அறிமுகக் காட்சியில் அவரைப் போல ஸ்டைலாக நடிக்க எந்த நடிகையாலும் வர முடியாது என்றே சொல்லி விடலாம். இது போன்று ரம்யாகிருஷ்ணனுக்கு இனி இன்னொரு படம் வராது.

ராதிகா

Radhika

Radhika

பசும்பொன் படத்தில் பெரிய நாச்சியாராகவே வாழ்ந்து இருப்பார் நடிகை ராதிகா. அவ்வளவு அபாரமான நடிப்பையும் இந்தக் கேரக்டரில் கொட்டி இருப்பார். படத்தின் தனது மூத்த மகன் தங்கப்பாண்டியின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகள் ரசிகர்களைக் கண்ணீர் சிந்த வைத்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சரி. நிச்சயம் அழுதே விடுவோம்.

அனுஷ்கா

இவர்களில் அனுஷ்கா மட்டும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து நடிப்பில் பட்டையைக் கிளப்பியுள்ளார். அருந்ததி படத்தில் இரட்டை வேடங்களில் வெளுத்துக் கட்டுவார் அனுஷ்கா. ஒன்று பயப்படும் வேடம், இன்னொன்று துணிச்சல் மிக்க வேடம். தான் நடித்த கதாபாத்திரங்களில் அனுஷ்கா தெரியவில்லை. அருந்ததியும், ஜக்கம்மாவும் தான் நமக்குத் தெரிகிறார். பாகுபலி படத்திலும் இவரது நடிப்பு பட்டையைக் கிளப்பும்.

Next Story