3 வருடங்களுக்கு முன்பு உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவிய போது தியேட்டர்கள் மூடப்பட்டது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. இதனால் திரையுலகை சேர்ந்த தொழிலாளர்கள், தியேட்டர் அதிபர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். அதன்பின் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்பின் படங்கள் வெளியாக துவங்கியது.
ஆனால், சில படங்கள் மட்டுமே அதில் சூப்பர் ஹிட் அடித்தது. பிளாக் பஸ்டருக்கும், ஹிட் படங்களுக்கும் வித்தியாசம் உண்டு. அது பலருக்கும் புரியாமல் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, உண்மையிலேயே சூப்பர் ஹிட் அடித்த படங்களின் லிஸ்டை பார்ப்போம்.
இதையும் படிங்க: என்ன எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது! குடிச்சுட்டு கார் ஓட்டி அலப்பறை செய்த நடிகர்கள்
கொரோனா காலம் கிட்டத்தட்ட குறைந்த நிலையில் வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்த இந்த திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. வசூலை வாரிக்குவித்து இப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
அதன்பின் டாக்டர், மாநாடு, கர்ணன், விக்ரம், திருச்சிற்றம்பலம், லவ் டுடே, பொன்னியின் செல்வம் 1, போர்த்தொழில், டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்கள் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. இது போக, வலிமை, வாரிசு, துணிவு ஆகிய படங்கள் சுமாரான ஹிட் படங்களாக அமைந்தது. தமிழ் படங்கள் அல்லாத கேஜிஎப் 2, காந்தாரா, ஆர்.ஆர்.ஆர். ஆகிய படங்களும் தமிழகத்தில் ஓடியது.
இதையும் படிங்க: இனிமே கிட்ட வாங்கடா!.. ஜெட் வேகத்தில் ரஜினி!.. லோகேஷ் படத்துக்கு கால்ஷீட் ரெடி..
இப்போது நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்யப்படதாக சொல்லப்பட்டாலும் உண்மையான வசூல் என்ன என்பது இன்னும் சில நாட்கள் கழித்தே தெரியவரும்.
அதேபோல் அடுத்து வெளியாகவுள்ள லியோ, இந்தியன் 2, சந்திரமுகி 2, கங்குவா ஆகிய படங்களும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், படங்கள் வெளியான பின்னரே உண்மையான நிலவரம் தெரியவரும்.
இதையும் படிங்க: வெளியில் இருந்தே ஆட்டம் காட்டும் ரஜினி – சர்வதேச தலைவர்களையும் அசரவைத்த ‘ஜெய்லர்’..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…