பாடல்களே இல்லாமல் ஹிட் அடித்த திரைப்படங்கள்! ஒரே இரவில் பின்னி பிடலெடுத்த ‘கைதி’ய மறக்க முடியுமா?

by Rohini |
kaithi
X

kaithi

Kaithi Movie: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே போல் பாடலும் முக்கியம் என்ற வகையில்தான் காலங்காலமாக தமிழ் சினிமா இயங்கி வந்தது. ஆனால் அந்த முறையை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார்கள் இப்போதைய இயக்குனர்கள்.

கைதி படத்தை எடுத்துக் கொண்டால் ஒரு பாடல் கூட கிடையாது. லோகேஷின் படங்கள் அந்த மாதிரி ஒரு வரைமுறையில் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் அந்தப் படத்தின் ஸ்கிரீன் ப்ளே ஒரே நாள் இரவில் நடந்த சம்பவமாகத்தான் அமைந்திருக்கும். அப்படி இருந்தாலும் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிங்க: தன் வழக்கமான பாணியையே பிரேக் செய்து வெற்றிகண்ட விஜயகாந்த்! இந்த படத்துல இவ்ளோ விஷயம் இருக்கா?

அடுத்ததாக விசாரணை திரைப்படம். இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். அட்டகத்தி தினேஷ் நடிக்க தவறே செய்த நான்கு பேர் போலீஸாரிடம் மாட்டிக் கொள்வதும் போலீஸார் அவர்களுடைய கேஸ்களை முடிக்க எல்லா புகார்களையும் இவர்கள் மீது திணிப்பதும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை இந்த நான்கு பேர் சமாளிப்பதும்தான் படத்தின் கதையாக இருந்தது. இந்தப் படத்திலும் பாடல்களே இல்லை. ஆனாலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படமாக விசாரணை படம் அமைந்தது.

அடுத்ததாக குருதி புனல். கமல் மற்றும் அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் குருதிப்புனல். புரட்சியாளர்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்திலும் பாடல்கள் கிடையாது. ஆனாலும் விமர்சன ரீதியாக படம் சூப்பர் டூப்பட் ஹிட்டடித்தது.

இதையும் படிங்க: கண்ணதாசன் வாழ்வில் அதிசயத்தை நிகழ்த்திய பாடல்!.. கவிஞர் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்திருக்கா!..

அதே போல் பார்த்திபனுக்கும் விக்ரமுக்கும் ஒரு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்த திரைப்படமாக ஹவுஸ்புல் திரைப்படம் அமைந்தது. இந்த படத்திலும் பாடல்கள் கிடையாது. ஒரு வயதான கெட்டப்பில் நடித்த பார்த்திபனின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படி வீடு, அந்த நாள் போன்ற பல படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளியாகி மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கின்றன.

Next Story