Connect with us

Cinema History

ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரித்த பிரம்மாண்டமான படங்கள் – ஓர் பார்வை

அந்தக்காலத்தில் ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலே படம் பிரம்மாண்டமாக சூப்பராக இருக்கும். ரசிகர்கள் திரையரங்கிற்கு முண்டியடித்துக் கொண்டு செல்வார்கள். சில நேரங்களில் தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்ற கூட்டமும் உண்டு. இதன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன்.

jemini films

இரு குழந்தைகள் ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு நாதஸ்வரத்தை ஊதும் அழகே அழகு தான். இந்த இன்ட்ரோ சீன் வரும்போதே தியேட்டரில் விசில் பறக்க ஆரம்பித்துவிடும். அப்பேர்ப்பட்ட இந்த நிறுவனத்தின் ஒரு சில படைப்புகளை இங்கு பார்ப்போம்.

சந்திரலேகா

இந்நிறுவனம் தயாரித்த 1948ல் வெளியான சந்திரலேகா படம் அகில இந்திய அளவில் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் வாரிக்குவித்தது.

ரஞ்சன், டி.ஆர்.ராஜகுமாரி, எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கான கதை எழுதியவர்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு. எஸ்.ராஜேஸ்வரராவின் இசை படத்திற்குப் பக்கபலம். இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு சென்று வெளியான 2வது படம் இதுதான்.

இந்தப்படத்தில் வரும் முரசு நடனத்தை அடிக்க இன்று வரை எந்தப்படமும் வந்ததில்லை. ஒரே நேரத்தில் 1000 நடன மங்கைகள் முரசுடன் நடனமாடுவர். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியானது ஹாலிவுட் படங்களுக்கே சவால் விட்டது.

அவ்வையார்

1949ல் அபூர்வ சகோதரர்கள் படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் சக்கை போடு போட்டது. 1953ல் வெளியான அவ்வையார் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அவ்வளவு பிரம்மாண்டமான பக்தி படம் இது.

இந்தப்படத்தில் கே.பி.சுந்தராம்பாள் அவ்வையாராக நடித்து அசத்தியிருப்பார். இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியவர் கொத்தமங்கலம் சுப்பு. இந்தப்படத்திற்கான இசையை எம்.டி.பார்த்தசாரதி, பிஎஸ்.அனந்தராமன், மாயவரம் வேணு ஆகியோர் அமைத்துள்ளனர்.

ஆலை பலவாகலாமோ, அறம் செய விரும்பு, அய்யனே அன்பர்க்கு மெய்யனே, கற்றது கைமண் அளவு, பெரியது கேட்கின், உலகினிலே, முத்தமிழ் தெய்வமே, நெல்லுக்கிரைத்த நீர், வெண்ணிலா வே, அன்னையும் தந்தையுமாகும் ஆகிய பாடல்கள் உள்ளன.

வஞ்சிக்கோட்டை வாலிபன்

vkv

அடுத்து 1958ல் வெளியான பிரம்மாண்டமான படம் வஞ்சிக்கோட்டை வாலிபன். ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா, பத்மினி ஆகியோர் படத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்து இருப்பார்கள். எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளியானது.

சி.ராமச்சந்திரா இசை அமைத்துள்ளார். கண்ணும் கண்ணும் கலந்து, வண்ணத்து மேனி உள்பட பல பாடல்கள் உள்ளன. லீலா, ஜிக்கி என இரு நடனசிகாமணிகள் போட்டி நடனமாடி பாடும் கண்ணும் கண்ணும் கலந்து பாடல் இன்று வரை பிரபலமானது.

வாழ்க்கை படகு

மீண்டும் இதே பேனரில் ஜெமினிகணேசன், தேவிகா நடித்த வாழ்க்கை படகு படம் 1965ல் வெளியானது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்துள்ளனர். கருத்தாழமிக்க பாடல்கள் முழுவதும் கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார்.

ஆயிரம் பெண்மை மலரட்டுமே, நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ? உன்னைத் தானே நான் அறிவேன், சின்னச் சின்னக் கண்ணனுக்கு, பழனி சந்தன வாடை, தங்கமகன், கண்களே கண்களே ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

மோட்டார் சுந்தரம்பிள்ளை

MSP

எஸ்.எஸ்.வாசன் இறப்பிற்குப் பின் அவரது மகன் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியம் சிவாஜிகணேசனிடம் இருந்து வாங்கி வெளியிட்ட படம் மோட்டார் சுந்தரம்பிள்ளை. இந்தப்படம் 1966ல் வெளியானது.

காத்திருந்த கண்களே, காதல் என்றால் என்ன?, குபு குபு நான் என்ஜின், மனமே முருகனின், பெண்ணே மாந்தர்தம், துள்ளி துள்ளி விளையாட ஆகிய மனது மறக்காத பாடல்கள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன. பாலு இயக்கிய இந்தப்படம் அந்தக்காலத்தில் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

ஒளிவிளக்கு

1968ல் வெளியான புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த படம் தான் ஒளிவிளக்கு. பின்னர் 1971ல் ஏவிஎம் ராஜன், வாணிஸ்ரீ நடிப்பில் இருளும் ஒளியும் என்ற படம் வெளியானது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் தைரியமாகச் சொல், நாங்க புதுசா, ருக்மினியே, மாம்பழத்தோட்டம், ஆண்டவனே உன், இறைவா உன் மாளிகையில் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

google news
Continue Reading

More in Cinema History

To Top