Connect with us

Cinema History

மன்னன் படத்துல ரஜினி சொந்தக்குரலில் பாட இவ்ளோ….நேரமாச்சா….? அவரே சொல்கிறார் பாருங்க…

இசைஞானிக்கு கடந்த பிப்ரவரி 2019ல் 75வது பிறந்தநாள் விழா வந்தது. அந்த விழாவை தமிழ்த்திரையுலகம் கொண்டாட ஆரம்பித்து விட்டது. அப்போது பல நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளையராஜாவைப் பத்தி முத்தாய்ப்பாகப் பேசினார். அவற்றில் ஒரு சில துளிகள்…

ஒரு நாளைக்கு 3 படம் ரீ ரெக்கார்டிங் பண்ணிருக்காங்க. தூங்காம நம்மள நம்பி வந்த தயாரிப்பாளர் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சி இப்படி எல்லாம் வேலை செய்வாங்க. இப்ப வந்து ஒரு படம் பண்ண 30 நாள் ஆகும்.

ilaiyaraja

அந்தக் கால கட்டத்துல கதை சரியில்லன்னு சொன்னா கதையை சரி பண்ணி, சாங்க கிரியேட் பண்ணி மியூசிக் பண்ணி படத்தை ஹிட்டாக்கிருக்காங்க. பொங்கல், தீபாவளிக்கு 14 படங்கள் வருதுன்னு சொன்னா அதுல 10….12 படங்கள் இளையராஜா இசை அமைச்சதுதான். பல்லவி 60 லருந்து 70 வரை ரஜினி தான் பாடுவார்.

ilaiyaraja and rajni

என் படமான வள்ளில இளையராஜா மியூசிக் போடல. கார்த்திக் உனக்கு ஓகேவா எனக் கேட்டார். நீங்களே சொன்னதுக்கு அப்புறம் என்ன ஓகே தான்னு சொன்னேன்.

லிங்கங்கள்ல மூணு வகை இருக்கு. ஒண்ணு தண்ணில இருந்து தோன்றினது…இன்னொன்னு நம்ம கையால செஞ்சது…மூணாவது சுயம்புவா தானா அது கடல்ல…மலைகள்ல அருவில எங்க வேணாலும் இருக்கலாம்…தானா தோன்றியது தான் சுயம்புலிங்கம். அது வெளிப்பட ஆரம்பிச்சா போதும்.

அப்பவே இருந்து ஒரு அதிர்வலைகள்…அதுல இருந்து வந்துக்கிட்டே இருக்கும். அப்படிப்பட்ட சுயம்புலிங்கம் தான் இளையராஜா. அவருக்கிட்டே இருந்து எப்பவும் ஒரு வைப்ரேஷன் வந்துக்கிட்டே இருக்கும். அன்னக்கிளி படத்துல ஆரம்பிச்ச இந்த வைப்ரேஷன் இப்ப வரைக்கு தொடருது என்று சிலாகிக்கிறார் ரஜினிகாந்த்.

kamal rajni

மன்னன் படத்துல என்ன பாட வச்சிருக்காருல…6 வரிகள் தான். அதைப் பாடுறதுக்கு 6 மணி நேரம் ஆச்சு. முரட்டுக்காளை படத்துல வருத பொதுவாக எம் மனசு தங்கம் பாட்ட யாராலும் மறக்க முடியுமா? இல்ல… ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ங்கற சாங்க மறக்க முடியுமா…., ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன், அப்புறம் காதலின் தீபம் ஒன்று….என பல பாடல்களை மறக்க முடியாது. ஆனா…ஒண்ணு…என் படங்கள விட கமல்ஹாசன் படத்துக்கு நல்லா மியூசிக் போட்டுருக்காங்க…என்றார் ரஜினி.

உடனே இளையராஜா சுதாரித்துக் கொண்டு, எப்பவுமே இவரு அப்படி சொல்வாரு….அவரு (கமல்) இப்படி சொல்வாரு. என் படத்த விட நீங்க ரஜினிக்குத் தான் நல்லா பாட்டு போட்டு இருக்கீங்கன்னு சொல்வார்…என்று சொல்கிறார்…இசைஞானி.

நமக்கு பாட்டுல வித்தியாசம் எல்லாம் கிடையாது. எனக்கு மியூசிக் தான். ஏன் ராமராஜனுக்குப் போடலயா, மோகனுக்கு மைக் மோகன்னு பேரு வச்சீங்கள்ல நீங்க….சுவாமி நான் சொன்னது உடனே….ரஜினி, கமல்ஹாசனுக்கும், எனக்கும் தான்னு சொன்னேன் என புன்னகை பூக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top