Cinema News
நீ ஹீரோவா நடிக்கிறியா.?! சியான் விக்ரம் கொடுத்த சூப்பர் பதிலடி.! மேடையில் நெகிழ்ச்சி சம்பவம்.!
தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை மிகவும் அருமையாக நடிக்க கூடியவர் விக்ரம். இதனால் என்னவோ இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் தற்போது கோப்ரா திரைப்படம் வெளியாகவுள்ளது.
நடிகர் சியான் விக்ரம் தனது ‘சேது’ படத்திற்கு முன் ஒரு பெரிய ஆக்சிடென்ட் காரணமாக தனது ஒரு காலில் மெட்டல் சர்ஜரி செய்திருப்பார். அப்போது, அவரது மருத்துவர் நீங்க நடக்கவே முடியாது, நான்கு சக்கரம் தள்ளு வண்டில் தான் உட்கார்ந்து போக முடியும் என்று அறிவுரை சொன்னார்களாம்.
சமீபத்திய ஒரு பேட்டியில் இது குறித்து பேசிய சியான் விக்ரம், அண்மையில் அந்த மருத்துவரை சந்தித்தாராம், அப்போது அந்த மருத்துவர் விக்ரமை பார்த்து, “டே நீ நடக்கிறியா” ஆமா சார் நான் இப்போ படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சியான் விக்ரம் கூற… என்னது நீ ஹீரோவாக நடிக்கிறியா.? என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம்.
இதையும் படியுங்களேன்- சமுத்திரக்கனி படத்துக்கு 150 கோடி பட்ஜெட்.?! நல்ல கதையை நாசம் பண்ணிராதீங்க…
மேலும் அந்த மருத்துவர் ஒரு பேட்டியில் கூட, இந்த மாதிரி விபத்து ஏற்பட்டவங்க ஒன்னு ட்ரக்ஸ் எடுத்துப்பாங்க, இல்லை என்றால் தற்கொலை செய்து விடுவார்கள் என்று அறிவுரை கூறினாராம். ஆனால், நீ விடாமுயற்சியுடன் நடித்து தற்போது வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டதாக கூறினாராம்.
ஆனால், இந்த விபத்து ஏற்பட்ட பின் என்னால் நடக்க முடியாதபோது, என்னோட விடா முயற்சியின் காரணமாக நான் இப்பொது நடித்து, இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் உருக்கமாக பேசினார்.