வெங்கடேஷ் பட்டால் முதல் எபிசோடிலேயே சர்ச்சையை சந்தித்த குக் வித் கோமாளி...!
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், எண்டர்டெயின் செய்யும் விதமாகவும் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. அதில் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
முதல் முறையாக ஒரு சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து நடத்த முடியும் என மக்களுக்கு உணர்த்திய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதில் கோமாளிகளாக வருபவர்கள் செய்யும் குறும்புகள் அனைவரையும் சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும். சமீபத்தில் இதன் இரண்டாவது சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்கி உள்ளது.
இதன் முதல் எபிசோடு கடந்த சனி மற்றும் ஞாயிறு அன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெரும்பாலான பழைய கோமாளிகளே இந்த சீசனிலும் இடம்பெற்றுள்ள நிலையி புகழ் மட்டும் மிஸ்ஸிங். அவருக்கு பதில் சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி ஆகியோர் புதிய கோமாளிகளாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
முதல் எபிசோடு என்பதால் கோமாளிகளின் அறிமுகம் நடந்தது. இதில் சூப்பர் சிங்கர் பரத்தின் அறிமுகம் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏற்கனவே இவரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வச்சு செய்த நிலையில், இதிலும் பாலா மற்றும் குரோஷி ஆகியோர் கலாய்த்து தள்ளினார்கள். அவர்களுடன் செஃப் வெங்டேஷமும், தாமுவும் சேர்ந்து பரத்தை கலாய்த்தனர்.
இந்நிலையில் பரத், செஃப் வெங்கடேஷ் பட்டை கலாய்க்க, முந்தைய சீசன்களில் புகழ், பாலா செஃப் வெங்கடேஷிடம் அடி வாங்கியது போல பரத்தும் அடி வாங்கினார். இந்த காட்சிகள் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. பரத்தை செஃப் அடித்தது மிகவும் மோசமாக இருந்ததாக பலரும் கூறி வருகிறார்கள்.
மேலும் சிலர் குக் வித் கோமாளி மீண்டும் தொடங்கியது சந்தோஷம் தான். ஆனால் வெங்கடேஷ் பட், கோமாளிகளை அடிப்பதை குறைத்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெங்கடேஷ் பட், "பொழுதுபோக்கு நிகழ்ச்சியை வெறும் டிவி நிகழ்ச்சியாக மட்டுமே பாருங்கள் என்றும், உண்மையில் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் அடிக்கவில்லை என்றும் அது எனது நோக்கம் இல்லை எனவும் செட்டில் நடப்பவை எல்லாமே வெறும் ஃபன் மற்றும் நகைச்சுவை மட்டுமே" என கூறியுள்ளார்.