Connect with us

இதுதான் சூப்பர் ஸ்டாரின் ராஜ தந்திரம்.! அந்த ஐடியாவை அப்படியே ஃபாலோ செய்யும் அஜித்.!

Cinema News

இதுதான் சூப்பர் ஸ்டாரின் ராஜ தந்திரம்.! அந்த ஐடியாவை அப்படியே ஃபாலோ செய்யும் அஜித்.!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சினிமாவில் தான் நம்பர் 1 என்பதை நிரூபித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இன்னும் இளம் இயக்குனர்களிடம் இணைந்து, இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. இவருக்கு ஓர் பழக்கம் உண்டு. அதாவது விளம்பர படங்களில் ரஜினி நடிக்க மாட்டார். தேவைப்படும் இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு செல்ல மாட்டார். மேலும்முத்து, படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் என ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 2 வருட கேப் விட்டு விடுவார்.

இதையும் படியுங்களேன் –இதுவரைக்கும் எந்த தமிழ் பாட்டுலயும் இந்த விஷயம் கிடையாது… நம்ம கேப்டன் அப்போவே மாஸ் கட்டிட்டார்…

அதனால், தங்கள் ஆஸ்தான நாயகரை 1 அல்லது 2 வருடத்திற்கு ஒரு முறை தான் அதிலும் திரையில் மட்டும் தான் பார்க்கமுடியும் என்பதால் அவர் படத்திற்கு மிக பெரிய ஓப்பனிங் இருக்கும். கிட்டத்தட்ட அதே  பார்முலாவை நடிகர் அஜித்தும் பின்பற்றி வருகிறார்.

அவர் இயக்கத்திலும் படங்கள் வெளியாக ஓராண்டு அல்லது இரண்டு வருடங்களாவது ஆகிவிடுகிறது. விவேகம் வர கிட்டத்தட்ட  2வருடம் ஆனது. வலிமை வெளியாக கிட்டத்தட்ட 3 வருடம் ஆகிவிட்டது. தற்போது அவரது 61வது திரைப்படம் பற்றியும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்களேன் – மணிரத்னம் வேண்டாம்…. வெற்றிமாறனுக்கு ஓகே.! அஜித் பட இயக்குனரின் அட்டகாசமான முடிவு.!

அஜித்தை திரையில் மட்டும் தான் பார்க்கமுடியும். அதுவும், அவர் விளம்பரத்தில் மட்டுமல்ல , பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். அதனால் ரஜினியை போலவே அஜித் படத்திற்கும் ஓப்பனிங் நன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட இதே பார்முலாவை தளபதி விஜயும் பின்பற்ற தொடங்கியுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top