Kalki Rajini: சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் கல்கி. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து அமிதாப்பச்சன் ,கமல், தீபிகா படுகோன், பசுபதி போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
உலகம் முழுவதும் வெளியான இந்த கல்கி திரைப்படம் முதல் நாள் வசூலில் 191 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் பாகுபாலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு இந்த படம் மிகப்பெரிய ஒரு ரீச்சை கொடுக்கும் என எதிர்பார்த்து இருந்தனர்.
இதையும் படிங்க: சோலோவா பின்னி பிடலெடுக்கும் தல! வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் இதோ
ஆனால் படம் பார்த்த அனைவரும் பிரபாஸை விட படத்தில் நடித்த அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தையே பெரிய அளவில் பேசிக்கொண்டு வருகிறார்கள். இதனால் பிரபாஸ் ரசிகர்கள் அப்செட் ஆகி இருக்கின்றனர். சமீபகாலமாக பிரபாஸ் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் சொல்லும் அளவு போகவில்லை. அதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது .
அதை அமிதாப் மற்றும் படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் பூர்த்தி செய்தார்களே தவிர பிரபாஸ் எப்பவும் போல ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கல்கி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தான் பார்த்திருக்கிறார்.
இதையும் படிங்க: இப்போ அதைக் கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது… கமலையே திணற வைத்த கேள்வி என்ன?
படத்தைப் பார்த்து அவர் மிகவும் பாராட்டிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் திரைப்படமாக இந்த கல்கி திரைப்படம் அமைந்திருக்கிறது. இதனுடைய இரண்டாம் பாகத்திற்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது என ரஜினிகாந்த் அந்த பதிவில் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…