Connect with us

ஜெயிலர் படத்தின் வெறித்தனமான அப்டேட் இதோ!…இந்த வீடியோவை சத்தியமா எதிர்பாக்கல!….

Cinema News

ஜெயிலர் படத்தின் வெறித்தனமான அப்டேட் இதோ!…இந்த வீடியோவை சத்தியமா எதிர்பாக்கல!….

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அண்ணாத்த திரைப்படமும், இயக்குனர் நெல்சனுக்கு கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆதலால், இருவரும் இணைந்துள்ள ஜெயிலர் படம் பெரிய ஹிட்டாக வேண்டும் என கடுமையாக வேலை செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக கதை, திரைக்கதை மெருகேற்றி, தற்போது இந்த பட ஷூட்டிங் பணிகளை ஆரம்பித்துள்ளார் இயக்குனர் நெல்சன். இந்த படத்தினை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இபபடத்தில் ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகம் ஆகியோர் நடிக்கிறார் என தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது. தற்போது அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்களேன் – விஜய் படமாக இருந்தா என்ன.? நான் நடிக்க மாட்டேன்… அடம்பிடித்த மைக் மோகன்…

அதில், ஏற்கனவே குறிப்பிட்டது போல, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகம்  ஆகியோர் நடிப்பதாகவும், மேலும், ராக்கி படத்தில் கவனம் ஈர்த்த வசந்த் ரவி இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் முதற்க்ட்டமாக சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top