ரஜினி கொடுத்த கால்சீட்.. பட்ஜெட் அதிகம்னு அந்த படமே வேணாம்னு சொன்ன நிறுவனம்.. எந்த படம் தெரியுமா?

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்து புதிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், பிரபல ஏஜிஎஸ் நிறுவனத்தை அணுகி 2.0 படத்தை தயாரிக்க கால்சீட் கொடுத்ததாகவும், அப்போது படத்தின் பட்ஜெட் 350 கோடி என ஷங்கர் சொன்னதாகவும் பின்னர் ஏஜிஎஸ் நிறுவனம் பல ஆராய்வுகளுக்கு பின்னர் படத்தின் பட்ஜெட் 170 கோடி ரூபாய் என்றால் படத்தை தயாரிக்கலாம் என்று கூறி படத்தில் இருந்து வெளியேறியனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

muthu
muthu  
Related Articles
Next Story
Share it