சூப்பர் ஸ்டார் ரஜினிகிட்ட இருக்குற ஒரு கெட்ட பழக்கம் இதுதான்.!

by Manikandan |
சூப்பர் ஸ்டார் ரஜினிகிட்ட இருக்குற ஒரு கெட்ட பழக்கம் இதுதான்.!
X

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் 6 வயது முதல் 90 வயது வரை அறிமுகமே தேவையில்லை. அந்தளவுக்கு புகழின் உச்சியில் இருக்கிறார் ரஜினிகாந்த். தற்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக இளம் இயக்குனர்களுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

அவர் மிகவும் பிடிவாதகாரர். ஒரு தடவ முடிவு செய்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்கமாட்டார் என பல திரை பிரபலங்கள் கூறியுள்ளதை அறிந்திருப்போம். இந்த விஷயத்தை பிரபல சூப்பர் ஹிட் எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன் - இப்படி ஒரு போட்டோவ எதிர்பார்க்கல.! இசைஞானிக்கு பாடம் சொல்லும் சூப்பர் ஸ்டார்.!

அவர் இயக்குனர் சுந்தர் சியிடம் இந்த தகவலை கூறியுள்ளார். அதாவது, ரஜினி தான் ஒரு கதையை முடிவு செய்துவிட்டால் அந்த கதையில் தான் நடிப்பாராம். அந்த கதை நன்றாக இருக்கிறது என கூறும் நபர்களோடு தான் பயணிப்பாராம்.

இப்படி பஞ்சு அருணாச்சலம் அவர்கள் கூறிய தகவல் தான் அருணாச்சலம் எனும் மிக பெரிய படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க மூலகாரணம் என குறிப்பிட்டார். ரஜினி கூறிய அருணாச்சலம் கதை சுந்தர்.சிக்கு பிடிக்கவில்லை. ஆனால், இருந்தாலும் ரஜினி படம் என்று நம்பிக்கை வைத்து அந்த படத்தை இயக்கி சூப்பர் ஹிட் படமாக மாற்றினார் சுந்தர்.சி.

Next Story