More
Categories: Cinema History Cinema News latest news

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரிபுதிரி வெற்றிக்குக் காரணமான ராஜாக்கள் இவர்கள் தான்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் டைட்டிலுக்கு என்றுமே தனி மவுசு தான். இவரது படங்களில் பெரும்பாலும் ராஜா என்று இருக்குமாறு வந்த படங்கள் அனைத்துமே ஹிட் தான்.

அப்படிப்பட்ட படங்கள் இவருக்கு இப்போது வரவில்லை. 80ஸ்களில் வந்து தமிழ்சினிமாவையே கலக்கின. அவற்றை இப்போது பார்க்கலாம்.

Advertising
Advertising

குப்பத்து ராஜா

1979ல் வெளியான இந்தப்படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். ரஜினிகாந்த், பத்மபிரியா, விஜயகுமார், மஞ்சுளா, அசோகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ராமகிருஷ்ணன், ராம்குமார், மனோரமா, பி.கே.சரஸ்வதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் திந்தோம் திந்தோம், அம்மம்மா ஆசை, கொடிகட்டி பறக்குதடா, புலி வருது ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தனிக்காட்டு ராஜா

Thanikattu raja rajni

வி.சி.குகனாதனின் இயக்கத்தில் 1982ல் வெளியான படம் தனிக்காட்டு ராஜா. ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, செந்தாமரை, வி.எஸ்.ராகவன், சத்யகலா, சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராவின் இன்னிசையில் பாடல்கள் அத்தனையும் டாப். இந்தப்படத்தில் ரஜினிகாந்தின் தனித்துவமான ஸ்டைல்களைப் பார்த்து ரசிக்கலாம்.

ராசாவே உன்ன நான், நான் தான் டா இப்போ, சந்தனக்காற்றே, கூவுங்கள் சேவல்களே ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

ராஜா சின்ன ரோஜா

1989ல் வெளியான படம் ராஜா சின்ன ரோஜா. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. சந்திரபோஸ் இசை அமைப்பில் பாடல்கள் அத்தனையும் சூப்பர். ரஜினிகாந்த், கௌதமி, ரகுவரன், ரவிச்சந்திரன், வி.கே.ராமசாமி, சின்னிஜெயந்த், எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகின. சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா, ராஜா சின்ன ரோஜாவோடு, வருங்கால மன்னர்களே, ஒரு பண்பாடு, ஒங்கப்பனுக்கும், பூ பூ போல், தேவாதி தேவர் எல்லாம் ஆகிய பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன. படம் வெளியான ஆண்டு 1989.

ராஜாதி ராஜா

Rajathi raja

1989ல் வெளியான இந்தப்படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கினார். ரஜினிகாந்த், ராதா, நதியா, ஆனந்தராஜ், ஜனகராஜ், வினுசக்கரவர்த்தி, ராதாரவி, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் ரஜினிகாந்த் ராஜா மற்றும் சின்னராசு என்ற இரு வேடங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். எங்கிட்ட மோதாதே, மாமா உன் பொண்ணக் கொடு, மலையாளக் கரையோரம், மீனம்மா மீனம்மா, வா வா மஞ்சள் மலரே ஆகிய மனது மயக்கும் பாடல்கள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.

போக்கிரி ராஜா

Pokkiri raja

1982ல் வெளியான இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராதிகா, மனோரமா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்தப்படத்தில் இசை அமைத்துள்ளார்.

கடவுள் படைச்சான், போக்கிரிக்கி போக்கிரி ராஜா, வாடா என் மச்சிகளா, விடிய விடிய சொல்லி ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டும் ரகங்கள்.

Published by
sankaran v

Recent Posts