கமலுக்கும் கௌதமிக்கும் இவ்ளோ ஒற்றுமையா? 2015ல் தமிழ்சினிமாவில் சக்கை போடு போட்ட படங்கள்
2015ம் ஆண்டு தமிழ்ப்பட உலகில் கலவையான பல மாஸ் நடிகர்களின் படங்கள் என்ட்ரி ஆனது.
அந்த வகையில் ரசிகர்களுக்கு ரொம்பவே விருந்து படைத்த ஆண்டு இது என்றால் மிகையில்லை. அவற்றில் முத்தான ஆறு படங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.
நானும் ரௌடி தான்
தனுஷ் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். நான் தயாரிக்கிறேன்னு ஒரு படம் எடுத்தார். அதுதான் நானும் ரௌடி தான்.
நயன்தாரா நடித்த சூப்பர்ஹிட் படம். பாண்டிச்சேரி உள்பட முக்கிய இடங்களில் 70 நாள்களில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சிறப்பாக நடித்த நயன்தாராவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. நகர்ப்புறங்களில் இந்தப் படத்திற்கு கூடுதலான வரவேற்பு கிடைத்தது. இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பாபநாசம்
மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் தான் பாபநாசம். மலையாளத்தில் எடுத்த அதே ஜீத்து ஜோசப் தான் இந்தப் படத்தின் இயக்குனர். 3.7.2015ல் வெளியானது.
ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். படம் செம கிளாஸாக இருந்தது. கமல், கௌதமியின் காம்பினேஷனில் படம் சக்கை போடு போட்டது.
குருதிப்புனல் படத்திற்குப் பிறகு கமல், கௌதமி சேர்ந்து நடித்தனர். கிட்டத்தட்ட 20 ஆண்டு இடைவெளிகளுக்குப் பின் இந்த சம்பவம் அரங்கேறியது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே இருவரும் பிரிந்தது வேறு விஷயம்.
கமலுக்கும் குருதிப்புனலுக்கு அப்புறம் 20 ஆண்டுகள் கழித்து பாபநாசம் தான் ரீமேக் படமாக அமைந்தது. என்ன ஒரு ஒற்றுமைன்னு பார்த்தீங்களா...?
தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிற ஒரு தந்தையின் கதை. குடும்ப சென்டிமென்ட், க்ரைம் த்ரில்லர் விஷயங்களை செமயாக எடுத்த படம் இது.
காஞ்சனா 2
17.4.2015ல் வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கிய படம். டாப்சி, நித்யா மேனன், கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். மொட்டைப் பையா பாடலுக்கு தமன் இசை அமைத்துள்ளார். சில்லட்டா பாடலுக்கு சி.சத்யா இசை அமைத்துள்ளார்.
வாயா வீரா, சண்டி முனி பாடலுக்கு லியோன் ஜேம்ஸ், போடா போடா பயந்து ஓடக்கூடாது படத்திற்கு அசோக மித்ரன் இசை அமைத்துள்ளார். இந்தப்படத்திற்கு முதலில் அஞ்சலியைத் தான் நித்யா மேனன் கேரக்டரில் நடிக்கக் கேட்டார்கள். அவர் நடிக்கலைன்னதும் தான் நித்யா மேனன் புக் ஆனார்.
முனி 1ல ராஜ்கிரண், முனி 2ல சரத்குமார், முனி 3 தான் இந்த காஞ்சனா 2. அப்படின்னா அதுல யாரா இருக்கும்னு எல்லோரும் ஆவலா எதிர்பார்த்தாங்க.
அதை ராகவா லாரன்ஸே பண்ணி அசத்தியிருப்பார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிறச் செய்து ரசிகர்களின் ஆவலையும் பூர்த்தி செய்தது. அப்பவே 100 கோடி வசூலைக் கொடுத்த படம் இது.
தனி ஒருவன்
28.8.2015ல் வெளியானது. ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாராவின் நடிப்பில் மோகன் ராஜாவின் இயக்கத்தில் படம் மாஸாக களமிறங்கியது. தனது தம்பி ஜெயம் ரவிக்காக மாஸ் படமாக உருவானது. ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார்.
மோகன் ராஜா தமிழில் நேரடியாக பண்ணிய படம். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்தப் படம் பல மொழிகளில் ரீமேக் ஆனது.
வேதாளம்
அஜீத், சுருதிஹாசன், லட்சுமிமேனன் நடித்துள்ளனர். தங்கச்சியாக நடித்து இருப்பவர் லட்சுமி மேனன். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பாக்ஸ் ஆபீஸில் கமர்ஷியலாக ஹிட் கொடுத்த படம்.
ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று தல அஜீத்துக்கு ஒரு தரமான படமாக அமைந்தது வேதாளம். 150 கோடி வசூலை வாரிக்குவித்தது.
பாகுபலி
பாகுபலி நான் ஈ வெற்றிக்குப் பிறகு தமிழில் ரீமேக் ஆனது. பிரபாஸ் படத்தின் கம்பீரமான பாகுபலி வேடத்தில் வந்து அசரடிப்பார். சத்யராஜ் கட்டப்பா கேரக்டரில் அழுத்தமாக முத்திரை பதித்திருப்பார்.
ராஜமௌலியின் இயக்கத்தில் படம் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தின் வசூல் வேற லெவல். தமிழ்த்திரை உலகில் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது படத்தின் பிரம்மாண்டம்.