தனக்கு வில்லனாக நெப்போலியனை நடிக்க வைக்க பயந்த ரஜினி!... அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!..

தமிழ்சினிமாவில் உயரமான நடிகர்களில் பலர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர். ஒன்று சத்யராஜ். மற்றொன்று நெப்போலியன். இருவருமே ஆரம்பத்தில் வில்லனாக நடித்து ஹீரோவானவர்கள் தான். நெப்போலியனைப் பற்றிய ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பார்ப்போம்.

எஜமான் படத்தில் ரஜினியின் பெயர் வானவராயன். அவருக்கு வில்லனாக நடித்த நெப்போலியனின் பெயர் வல்லவராயன். ஆர்.வி.உதயகுமார் இயக்கினார். படத்தில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் அளவு நெப்போலியனின் கதாபாத்திரம் அமைந்து இருந்தது. டயலாக்குகளும் பஞ்ச் சாகவே இருந்தன. முதலில் இந்தப் பாத்திரத்தில் நெப்போலியனை நடிக்க வைக்க ரஜினியே தயங்கினாராம். அதன்பின்னர் அனைவரும் சொல்லி சமாதானம் செய்த பிறகே ஒத்துக்கொண்டாராம்.

படம் முடிந்ததும் நெப்போலியனைக் கட்டி அணைத்துப் பாராட்டிய சம்பவமும் நடந்ததுதான் இதில் ஹைலைட். இந்தப்படத்தில் கிடைத்த வரவேற்பு அவருக்கு மலையாளத் திரை உலகமும் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்றதாம்.

Yejaman Nepoleon

Yejaman Nepoleon

மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். தசாவதாரம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து அசத்தினார். ரஜினி கூட நடித்ததால் தான் எனக்கு மலையாளப்பட உலகில் வாய்ப்பு கிடைத்தது என வாயாரப் புகழ்கிறார் நெப்போலியன். இவர் முதன் முதலில் நடித்த படம் புதுநெல்லு புதுநாத்து. என்றாலும் ஹீரோவாக அறிமுகமானது சீவலப்பேரி பாண்டி தான். இந்தப் படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் கொடுத்தது.

பாரதிராஜாவின் அறிமுகம் என்றாலே அந்த நடிகர்கள் பட்டையைக் கிளப்புவார்கள். அப்படித்தான் நெப்போலியனும் அவரது இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து படத்தில் அறிமுகமானார். சீவலப்பேரி பாண்டி இவரது திரையுலகப் பயணத்தில் ஒரு மைல் கல்.

கிழக்குச்சீமையிலே, எஜமான், எட்டுப்பட்டி ராசா போன்ற படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார். அதன்பிறகு கிடாரி, போக்கிரி, முத்துராமலிங்கம் ஆகிய படங்களில் இளம் நடிகர்களான சசிக்குமார், விஜய், கௌதம் கார்த்திக் ஆகியோருடனும் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். 98ல் கலைமாமணி விருதைப் பெற்றார்.

 

Related Articles

Next Story