குறும்பு சிரிப்பில் வளைக்கிறீயே...கண்ணால சுண்டி இழுக்குறீயே..! வேகமாக வளர்ந்து வருகிறாரா...பிரியங்கா மோகன்!
வளர்ந்து வரும் புதுமுக நாயகிகளில் ஒருவர் பிரியங்கா மோகன். இவர் நடித்த படங்கள் அனைத்தும் தற்போது சக்கை போடு போடுகின்றன. டாக்டர் படத்தில் அறிமுகமானார். நெல்சன் இயக்கிய இந்தப்படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன். அதன் பின்னர் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
குறும்பான சிரிப்பு, பெண்களுக்கே உரிய வெட்கம் என மனதை அள்ளுகிறார். துரு துருவென வரும் அழகு, அழகான சிரிப்பு என உலா வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சிபிசக்கரவர்த்தியின் இயக்கத்தில் டான் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார்.
பிரியங்கா அருள் மோகன் என்பது இவரது முழுப்பெயர். இவர் கேங்லீடர் மற்றும் ஸ்ரீகரம் ஆகிய பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
டாக்டர் மற்றும் டான் என இரு படங்களிலும் சிவகார்த்திகேயனுடனே ஜோடி சேர்ந்து விட்டார் பிரியங்கா மோகன். இவர் விஜய் மற்றும் அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டுமானால் எப்படி நடிப்பீர்கள் எனக் கேட்டதற்கு விஜய் உடன் ரொமான்டிக் வேடத்திலும், அஜீத்துடன் பக்கா என்டர்டெய்ன்மென்ட் வேடத்திலும் நடிப்பேன் என ஜாலியாகக் கூறியுள்ளார்.
வேகமாக வளர்ந்து வரும் பிரியங்கா மோகன் கிடைக்கும் வரை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி தாராளமாகக் கவர்ச்சியைக் காட்டி வேகமாக இடத்தைக் காலி செய்து விடாமல், கவனமாக படங்களைத் தேர்ந்தெடுத்து மென்மேலும் வளர வேண்டும் என்பதே அவரை நம்பி படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணம்.