வர்த்தக ரீதியாக படங்கள் பெருமளவில் வெற்றி பெற என்ன காரணம் தெரியுமா? 2021ல என்ன நடந்ததுன்னு பாருங்க...

by sankaran v |   ( Updated:2022-03-07 08:11:41  )
வர்த்தக ரீதியாக படங்கள் பெருமளவில் வெற்றி பெற என்ன காரணம் தெரியுமா? 2021ல என்ன நடந்ததுன்னு பாருங்க...
X

83 movie poster

வர்த்தக ரீதியாக பெருமளவில் வெற்றி பெறும் படங்கள் என்றால் அது பாலிவுட் தான். அதனால் தான் இங்கு வரும் நடிகர், நடிகைகளுக்கு மவுசு அதிகம். தமிழ் நடிகர்கள் கூட சில நேரங்களில் இங்கு ஒரு சில படமாகவது நடித்து விட வேண்டும் என்று துடிப்புடன் களமிறங்கி விடுகின்றனர்.

அந்த வகையில் கமல், ரஜினி காலம் தொட்டு இன்றைய தனுஷ், ஜீவா, சமுத்திரக்கனி வரை இந்தித்திரையுலகில் காலடி எடுத்து வைத்து விட்டனர். இப்போது கடந்த ஆண்டு சூப்பர்ஹிட் கொடுத்த சில இந்திப்படங்களைப் பார்ப்போம்.

83

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, அம்மி விர்க், ஜிவா, ஹார்டி சாந்து, சாஹில் கட்டார், சிராக் பட்டில், பத்ரீ, ஜேடின் சர்னா, தைர்யா கார்வா, சாகுயிப் சலீம், தாஹிர் ராஜ் பாசின், ஆதிநாத் கோத்தாரி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜூலியஸ் பாக்கியம் இசை அமைத்துள்ளார். வெகுஜன ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றது இந்தப் படம்.

1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. அந்த தருணத்தை சித்தரிக்கிறது இந்தப் படம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா இந்தப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டிகார் காரே ஆஷிகுய்

ஆயுஷ்மேன் குரானா, வாணி கபூர், தான்யா அப்ரோல் உள்பட பலர் நடித்துள்ளார். இனிமையான கதை களத்துடன் வந்துள்ள இந்தப்படத்தில் மெல்லிய நகைச்சுவை உணர்வும் கலந்து இருக்கும்.

இது ஒரு முதிர்ச்சியான, உணர்வுப்பூர்வமான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.

தலைவி

thalaivi

இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட கதை. தமிழிலும் இதே படம் தயாரானது. இது எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் தீவிர காதல் கதை.

கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி, பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராஜ் அர்ஜூன், ஜிசு, செங்குப்தா உள்பட பலர் நடித்துள்ளனர்.

பெல் பாட்டம்

bell bottom

80களில் ரஜினி கமல் கால கட்டத்தில் இந்தப் பேண்ட்டுகளுக்கு கடும் கிராக்கி இருந்தது. அப்போது இளைஞர்கள் மத்தியில் மிகவும் வசீகரமாக இருந்த ஆடை எது என்றால் இந்த பெல் பாட்டம் தான். இந்தப் பெயரையே தலைப்பாகக் கொண்டு உருவான படம் பெல் பாட்டம்.

அக்ஷய் குமார், வாணி கபூர், குரேஷி, லாரா தத்தா, அடில் ஹ{சைன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது பாலிவுட்டில் ஒரு வசீகரமான படம். வணிகரீதியாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரூஹி

ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர், வருண் சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். இது சிறந்த பொழுது போக்கு படமாக உள்ளது. திரையரங்கிற்கு சென்று இந்த அனுபவத்தை ரசிகர்கள் உணரலாம்.

Next Story