தரும சிந்தனை கொண்ட தனித்துவமிக்க படங்கள்
தர்மம் என்பது ஒரு சக்தி வாய்ந்த வார்த்தை. இதைக் கடைபிடிப்பவர்கள் எவராக இருந்தாலும் ஒழுக்க சீலர்களாகவே இருப்பார்கள்.
இவர்கள் இந்த ஒன்றைக் கடைபிடிக்கும்போது அவர்கள் எவ்விதத்திலும் நன்னெறி தவற மாட்டார்கள். முதலில் அதர்மம் வெல்வது போல் தெரிந்தாலும் முடிவில் தர்மமே வெல்லும்.
இதுதான் சங்க இலக்கியம் நமக்கு உணர்த்திய பாடம். தர்மம் செய்பவனுக்கு என்றாவது ஒருநாள் அவன் செய்த தர்மம் அவனுக்கு துன்பம் நேர்கையில் அவனைக் கைகொடுத்து தூக்கி விடும்.
அவன் உயிரைக்கூட காப்பாற்றுவது இந்த தர்மம் தான். அந்த வகையில் தர்ம சிந்தனை மேலோங்கும் தனித்துவமிக்க படங்களைப் பார்க்கலாம்.
தர்மம் வெல்லும்
1989ல் வெளியான இந்தப்படத்தை கே.ரங்கராஜன் இயக்கினார். விஜயகாந்த், கௌதமி, டெல்லிகணேஷ், சின்னிஜெயந்த், செந்தில் ஸ்ரீகாந்த், சுஜாதா, கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ரகங்கள். பூவோடு காத்து, தேவி தேவி, என்னத்துக்கு என்ன பெத்த, ஹே மாப்ளே செல்ல மாப்ளே உள்பட பல பாடல்கள் உள்ளன.
தர்மம் தலைகாக்கும்
1963ல் வெளியான இந்தப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி இணைந்து நடித்த சூப்பர்ஹிட் வெற்றிச்சித்திரம். தேவர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கே.வி.மகாதேவனின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. தர்மம் தலைகாக்கும், அழகான வாழை, ஹலோ ஹலோ சுகமா உள்பட பல பாடல்கள் உள்ளன.
தர்மத்தின் தலைவன்
1988ல் வெளியான இந்தப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இளையராஜாவின் இன்னிசையில் ரஜினிகாந்த், பிரபு, குஷ்பூ, சுஹாசினி, சார்லி, நாசர், வி.கே.ராமசாமி, டிஸ்கோசாந்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இன்னிசையில் முத்தமிழ் கவியே, ஒத்தடி ஒத்தடி, தென்மதுரை வைகை நதி உள்பட பல இனிமையான பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
தர்மதுரை
1991ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ராஜசேகர். ரஜினிகாந்த், மது, கௌதமி, நிழல்கள் ரவி, சரண்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆணென்ன பெண்ணென்ன, அண்ணன் என்ன தம்பி என்ன, மாசி மாசம் ஆளான பொண்ணு, ஒண்ணு ரெண்டு, சந்தைக்கு வந்த கிளி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
தர்ம பிரபு
2019ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் முத்துக்குமரன். யோகிபாபு, ராதாரவி, ஜனனி அய்யர், ரேகா, சாம் ஜோன்ஸ், ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.
ஊரார் ஒன்ன, உசுருல எதையோ, கட்ட கருப்பா உள்ளிட்ட பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன. நகைச்சுவை அம்சம் கலந்த இந்தப்படமானது எமதர்ம ராஜாவின் கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. யோகிபாபு எமதர்மராஜாவாக வந்து நகைச்சுவையில் கலக்குகிறார்.