Cinema History
குழந்தைகளை குதூகலப்படுத்த வெளியான சூப்பர்ஹிட் படங்கள்… இவ்ளோ இருக்கா?
தமிழ்ப்பட உலகில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப காலம் காலமாக ஒரு சில படங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பல படங்கள் வந்துள்ளன.
குழந்தைகள் படம் என்றாலே கட்டாயமாக பெற்றோர்களும் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள். அப்போது அந்தப் படத்திற்கு எளிதாக வெற்றி கிடைத்து விடும் என்பதற்காகத் தான் அன்று முதல் இன்று வரை குழந்தைகளை மையமாக வைத்த படங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்தப் படங்கள் ரொம்பவே ஜாலியாக இருக்கும். படத்தில் நடித்த குழந்தைகளின் குறும்புத்தனங்கள் ரசிக்கும் விதத்தில் இருக்கும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
அஞ்சலி
1980ல் வெளியான படம் மழலைப் பட்டாளம். இது ஒரு முழுநீள காமெடி படம். இந்தப் படத்தை இயக்கியவர் லட்சுமி. விஷ்ணுவர்த்தன், சுமித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர்.
1990ல் மணிரத்னம் இயக்கிய படம் அஞ்சலி. மனமுதிர்ச்சி இல்லாத குழந்தையை மற்ற குழந்தைகள் விளையாடும்போது கலாட்டா செய்கிறது. இது அந்தக் குழந்தையின் பெற்றோரை சோகத்திற்கு ஆளாக்குகிறது. அவர்களும் குழந்தை குணமாக போராடுகிறார்கள்.
துர்கா
1990ல் வெளியான படம் துர்கா. குரங்கு, பாம்பு, நாயுடன் விளையாடும் குழந்தையாக நடித்து இருக்கும் பேபி ஷாலினி ரொம்பவே ரசிக்க வைக்கிறாள். குழந்தைகள் விரும்பி பார்க்கும் படம் இது. எங்க மாமா படத்தில் சிவாஜி நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் பல காட்சிகள் குழந்தைகளை மகிழ்விக்கும் விதத்தில் இருக்கும். பந்தம் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பேபி ஷாலினி நடித்து இருந்தார். இதுவும் குழந்தைகளுக்கான கதை தான்.
ராஜா சின்ன ரோஜா
1987ல் பூவிழி வாசலிலே படம் வெளியானது. இந்தப் படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். கதாநாயகியாக சுஜிதா நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்கியவர் பாசில். அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவெ நடித்த படம் ராஜா சின்ன ரோஜா. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1989ல் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தில் பூ பூ போல் மனசிருக்கு என்ற பாடல் செம கிளாஸா இருக்கும்.
காக்கா முட்டை
2015ல் வெளியான படம் பசங்க 2. சூர்யா, அமலாபால் நடித்த படம். பாண்டிராஜ் இயக்கிய இந்தப் படத்தைத் தயாரித்தவர் சூர்யா. 2014ல் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இதுவும் இந்த லிஸ்டில் தான் வருகிறது.