5 வயசுல இருந்தே சினிமா பார்க்க ஆரம்பிச்ச நகைச்சுவை நடிகர் இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க...!

by sankaran v |   ( Updated:2022-07-20 10:58:12  )
5 வயசுல இருந்தே சினிமா பார்க்க ஆரம்பிச்ச நகைச்சுவை நடிகர் இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க...!
X

lollu saminathan

விஜய் டிவியில் செம கலாய் கலாய்த்த நகைச்சுவை தொடர் லொள்ளு சபா. 2004 முதல் 2007 வரை இந்தத் தொடர் ஒளிபரப்பானது. ஏதாவது ஒரு படத்தை மையமாக வைத்து அதே போல லொள்ளு செய்து நடித்து வந்த தொடர்.

இந்தத் தொடரில் பிரபலமான பல ஹீரோக்களையே கலாய்த்து வந்தனர். சந்தானம் தொடரின் முக்கிய நாயகனாக வலம் வந்தார். அதன் பிறகு குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர்கள் மனோகர், யோகிபாபு ஆகியோர் திரைத்துறையில் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வருகின்றனர்.

அந்த வரிசையில் சுவாமிநாதனும் ஒருவர். அவரைப் பற்றி இப்போது பார்ப்போம். ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இடையிடையே சினிமாவிலும் தலைகாட்டுகிறார். இவர் நடித்த படங்களில் இவர் வரும் காட்சிகள் குபீர் சிரிப்பு வரவைப்பவை. அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில் மாணவராக சிறுவேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

lollu sabha swaminathan

ஆறு, அம்பாசமுத்திரம் அப்பானி, வேலாயுதம், மதகஜ ராஜா, மான்கராத்தே ஆகிய படங்களில் நடித்துள்ளார். மான்கராத்தே படத்தில் மருத்துவராக நடித்து அசத்தியுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் முதிர்ந்த மாணவராக நடித்து வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உளுந்தூர்பேட்டை உலகானந்தா சுவாமியாக வந்து செம கலாய் கலாய்ப்பார்.

விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் மாமாவாக வருகிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இவர் வரும் காட்சிகள் அனைத்தும் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். அதேபோல ஒன்பதுல குரு படத்தில் இவர் வேலுநாயக்கராக வந்து அதிரடி காட்டுகிறார். இவர் இந்தப்படத்தில் சிவா மற்றும் சௌமியா என்ற கேரக்டர்களின் பக்கத்து வீட்டுக்காரராக வருவார்.

டிவி தொடர்களில் பலவற்றில் இவர் நடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், வாணி ராணி, பிரியமானவள், கனா காணும் காலங்கள் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் 4 தொடரில் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.

இவர் எந்தக் கதாபாத்திரமானாலும் இயல்பாக நடித்து அசத்துவார். தனது அனுபவங்களை இவ்வாறு பகிர்கிறார்.

சினிமாவுக்கு வந்ததே காமெடி தான். பள்ளியில் ஒழுங்காக படிக்கவில்லை. வாத்தியார் மாதிரி நடித்துக் காட்டுவேன். மிமிக்ரி பண்ணுவேன். பசங்கள்லாம் என்கரேஜ் பண்ணுவாங்க. 5 வயசுல இருந்து சினிமா பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அதனால வீட்டுல ரொம்ப டென்ஷனாயிட்டாங்க. விசேஷ காலம்னா ஒரு நாளைக்கு 4 ஷோ பார்த்துருவேன். அப்போ 10 முடிச்சு பியுசி, அரியர். பியுசின்னா இப்போ பிளஸ் 2. நான் கும்பகோணம் காலேஜ்ல தான் அரியர் முடிச்சேன். இதே காலேஜ்ல தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் எடுத்தாங்க.

lollu swaminath

நான் சின்ன வயசுல இருந்தே படம் பார்த்ததால பாலையா, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா இவங்கள்லாம் எனக்கு நல்ல பழக்கம். வெண்ணிற ஆடை மூர்த்தி, சித்ரா லெட்சுமணன், டெல்லி கணேஷ் இவங்கள்லாம் யதார்த்த நடிப்பு. அந்தக்காலத்து நடிகர்களாம் வெரிகுட் ஆக்டர். காமெடி பண்ணனும்னா பண்ணுவாங்க. வில்லன் ரோலும் பண்ணுவாங்க. அந்த மாதிரி வரணும்னு ஆசை. ஆசைப்பட்டது எப்பவும் சினிமாவுல நடக்காதுல. அதனால என்னை காமெடியாக்கிட்டாங்க.

Next Story