Alwa Vasu
அல்வா வாசு
பெயரிலேயே ஒரு கிக்கான இனிப்பு தென்படுகிறதே என்கிறீர்களா? இந்த பெயர் எப்படி வந்தது என்று கேட்டால் அதுவும் ஒரு ருசிகரமான சம்பவம் தான்.
வாசு என்ற இயற்பெயர் கொண்டவர் அல்வா வாசு. இவரது வயது 57. அமைதிப்படை படத்தில் சத்யராஜூக்கு அல்வா வாங்கி கொடுத்தவர். வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்தார். சிறு வயதில் இசை ஆர்வம் கொண்டவர். படிப்பில் படுசுட்டி.
கிதார் வாசிப்பார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் படித்தார். அங்கு இவருடன் படித்த சக மாணவர்கள் இவர் சினிமாவில் மியூசிக் டைரக்டராகலாம் என்று உசுப்பேத்தினர். அப்போது முதல் அல்வா வாசு மியூசிக் டைரக்டர் ஆவலில் இருந்தார்.
கதை எழுதும் திறனும் இருந்ததால் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். இவரது படங்களுக்காக வேலை பார்த்தார். மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்கள் தான் சுந்தர் சி. இவர் மணிவண்ணனுக்கு செல்லப்பிள்ளை. வண்டிச்சக்கரம் படத்தில் ஒரு காட்சியில் தோன்றி அறிமுகமானார்.
நீங்கள்லாம் வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்….கடல்லே இல்லையாம் போன்ற ட்ரென்டிங்கான காமெடி பஞ்ச்கள் இவருடையது தான்…வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த பல காமெடிகள் தற்போது மீம்ஸ்களாகி வருகின்றன.
அமைதிப்படை படத்தில் உதவி இயக்குனராக இருந்து அதில் நடிக்கவும் செய்தார். அதில் சத்யராஜீக்கு அல்வா வாங்கி கொடுக்கும் கேரக்டரில் நடித்தார். அதிலிருந்து இவருக்கு அல்வா வாசு என்ற பெயர் வந்தது.
மணிவண்ணன் இயக்கிய படங்களுக்கு காமெடி ஸ்கிரிப்ட் எழுதினார். வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த பல காமெடிகள் தற்போது மீம்ஸ்களாகி வருகின்றன. இவர் இயக்குனராக வர வேண்டும் என்று மணிவண்ணன் விரும்பினார். அல்வா வாசுவுக்கும் கடைசி வரை இயக்குனராக வர வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் அது என்னவோ நிறைவேறாமல் போய்விட்டது.
தனியாக கதை எழுதி தயாரிப்பாளர்களிடம் முயற்சி செய்து பார்த்தார். ஆனால் இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதார நெருக்கடியால் சிறு சிறு வேடங்களில் தலை காட்டினார்.
காமெடியனாக தொடர்ந்து நடித்ததன் மூலம் வடிவேலுவுடன் அறிமுகம் கிடைத்தது. வடிவேலுவின் காமெடி டீமில் அல்வா வாசு சேர்ந்தார். 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார்.
கிட்டத்தட்ட 900 படங்களுக்கு மேல் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார். வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமானவை. அல்வா வாசு கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றினார். இவரது சொந்த ஊரான மதுரையில் 2017ல் காலமானார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…