More
Categories: Cinema History Cinema News latest news

தமிழ்சினிமாவின் வழக்கமான ஃபார்முலாவை உடைத்த நாகேஷ் படம்

தமிழ்சினிமாவில் நகைச்சுவையில் பாடி லாங்குவேஜால் அசத்துபவர் நடிகர் நாகேஷ். அவர் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து விட்டார் என்றால் அதற்குப் பின்னால் அவர் உழைத்த கடும் உழைப்பு தான் காரணம். அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு ஆச்சரியமான நிகழ்வை தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் இப்படி சொல்கிறார்.

அன்னை படத்தில் லைலா மஜ்னு என்ற ஒரு ஓரங்க நாடகம். அதில் நடிப்பதற்கு ஒல்லியான ஒரு நடிகர் தேவைப்பட்டது. அதற்காக நாகேஷை நடிக்க வைத்தோம்.

Advertising
Advertising

மஜ்னுவாக சந்திரபாபு நடித்தார். படத்தில் 1000 அடிகள் தான் இந்த நாடகம். என்றாலும் நாகேஷ், சந்திரபாபுவுக்கு நிகராக சூப்பராக நடித்திருந்தார். அதை மறக்கவே முடியாது.

Nagesh

கலைவாணர் நல்லதம்பி படத்தில் நடித்தார். அது சக்கை போடு போட்டது. அதைப் போல ஒரு நகைச்சுவை நடிகரை வைத்துப் படம் எடுக்க விரும்பினோம். முதலில் சந்திரபாபுவை வைத்து படம் எடுக்க நினைத்தோம். ஆனால் அதற்கு அவருக்கு 1 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் வணிக ரீதியில் படம் வெற்றி பெறுமா என்றும் சிந்திக்க வேண்டியிருந்தது.

அதனால் கொஞ்சம் மாற்றி யோசித்தோம். நாகேஷைப் போட்டுப் படமாக எடுக்கலாம் என்று நினைத்தோம். அந்த நேரம் திருப்பூரில் நடந்த ஒரு விழாவிற்கு நாங்களும், நாகேஷ_ம் ஒன்றாகப் போகும் சூழல் உருவானது.

சேலத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்கள் எண்ணத்தைப் பற்றி அவரிடம் சொன்னோம். அதற்கு அவரும் சில யோசனைகளை எங்களிடம் கூறினார். அதற்கு ஏற்ப நாங்களும் சில கருத்துகளை முன்வைத்தோம். அப்போது கதைக்கேற்ப ஒரு மூலக்கரு உருவானது.

அப்போது பாலசந்தரின் நாடகக்குழுவில் நாகேஷ் நடித்துக் கொண்டிருந்தார். திருப்பூரில் இருந்து திரும்பி வந்தோம். பின்னர் நாகேஷ் மூலமாக பாலசந்தரை சந்தித்தோம்.

அப்போது பாலசந்தரிடம் 1000 ரூபாயைக் கொடுத்து ஒரு நாடகம் எழுதி மேடையேற்றுங்கள் என்றோம். நாடகம் பிடித்து இருந்தால் அதைப் படமாக்குவது என்றும் தீர்மானித்தோம்.

Nagesh in server sundaram

இப்படி உருவானது தான் சர்வர் சுந்தரம் நாடகம். பாலசந்தர் நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்றினார். நாங்கள் போய் பார்த்தோம். எங்களுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. உடனே அதைச் சொந்தமாக சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.

படம் தயாரிக்க பைனான்சியர் ஏற்பாடு செய்ய முயன்றோம். இதை எப்படியோ தெரிந்து கொண்டது ஏவிஎம் நிறுவனம். உடனே அங்கிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. வெளியில் எதற்கு பைனான்சியரைத் தேடுகிறீர்கள்? எங்களோடு கூட்டாகத் தயாரியுங்கள் என்றார்.

உடனே அந்தப் படத்தை நல்ல படியாக எடுத்து முடித்தோம். படமும் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. நகைச்சுவை ஜாம்பவான் ஆனார் நாகேஷ். அவரின் நடிப்புத் திறனுக்கும் படம் தீனி போட்டது.

நல்லதம்பி படம் எந்த அளவுக்கு எங்களுக்கு நற்பெயரையும், புகழையும் தேடித்தந்ததோ அந்த அளவுக்கு இந்தப்படம் எங்களுக்குக் கைகொடுத்தது.

கதையின் பாத்திரங்களுக்கேற்ப நடிகர்களைத் தேர்வு செய்தது தான் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

கதையின் நாயகனோ அழகில்லாதவன். ஆனால் கதையின் ஹீரோ என்றால் அழகாக இருக்க வேண்டும். இந்த நியதியை உடைத்தது இந்த படம். இந்த முயற்சி வெற்றி பெற நாகேஷ் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததை மறக்கவே முடியாது.

server sundaram santhanam

இயக்குனர் கே.பாலசந்தரும் புதுமை விரும்பியாக இருந்ததால் தனது சொந்தப்படமாக நினைத்து இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்தார்.

இந்தப்படத்தின் தலைப்பை 2017ல் சந்தானம் தனது படத்திற்காக வைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
sankaran v

Recent Posts