நடிகைகளை தேவதை போல காட்டிய இயக்குனர்கள்!.. இன்னமும் மறக்க முடியாத மனிஷா கொய்ராலா!..

by sankaran v |
நடிகைகளை தேவதை போல காட்டிய இயக்குனர்கள்!.. இன்னமும் மறக்க முடியாத மனிஷா கொய்ராலா!..
X

ManishaTSMJ

தமிழ்ப்படங்களில் ஹீரோயின்கள் என்றாலே ரசிகனுக்கு ஒரு இன்பக் கிளுகிளுப்பு தான். அவளது நடிப்பை விட கவர்ச்சியையே பெரிதும் விரும்பும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியது இயக்குனர்களின் கடமை அல்லவா. அந்த கடமையைச் சற்றும் நேர்த்தி குறையாத வகையில் செவ்வனே செய்து வரும் இயக்குனர்கள் ஒரு சிலர் தான் உண்டு. அவர்கள் யார் யார் என பார்ப்போமா...

மணிரத்னம்

MR

பம்பாய் படத்தில் மனீஷா கொய்ராலாவை இவ்வளவு அழகாக வேறு யாரும் காட்டி விட முடியாது. அவ்வளவு பேரழகு. அந்தப் படம் வந்த புதிதில் மனீஷாவுக்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் திரையரங்கிற்குத் திரும்ப திரும்ப படையெடுத்தனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவை அழகு தேவதையாகக் காட்டியிருப்பார். அதற்கு சற்றும் குறையாதவாறு ஐஸ்வர்யா ராயையும் காட்டியிருப்பார். அதே போல அலைபாயுதே படத்தில் ஷாலினியையும் அழகாகக் காட்டி அசத்தியிருந்தார்.

கௌதம் மேனன்

GM

GM

மின்னலே படத்தில் ரீமாசென்னை அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் கௌதம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவை அழகு பதுமையாக காட்டியிருப்பார்.

அதே போல காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களில் ஜோதிகாவையும், வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோரையும் வெகு அழகாக காட்டியிருப்பார்.

லிங்குசாமி

Tamanna ling

Tamanna ling

ரன் படத்தில் மீரா ஜாஸ்மினை இத்தனை அழகாக வேறு எந்தப் படத்திலும் பார்த்திருக்கவே முடியாது. அவ்வளவு கொள்ளை அழகையும் ஒட்டுமொத்தமாக அந்தப் படத்தில் காட்டியிருப்பார். அதே போல பீமாவில் திரிஷாவைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு பேரழகியாகக் காட்டியிருப்பார்.

அதிலும் அந்த ரகசிய கனவுகள் பாடலை நாம் வைத்தக் கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு படமாக்கி இருக்கிறார். அதே போல் பையாவில் தமன்னாவையும், சண்டக்கோழி 2ல் கீர்த்தி சுரேஷையும் அழகு சிலையாக வடித்திருப்பார். பையா படத்தில் தமன்னாவை மழையில் சொட்டச் சொட்ட நனைய வைத்து மொத்த அழகையும் ஒன்றுவிடாமல் எடுத்திருப்பார் பாருங்கள். அடடா மழைடா அட மழைடா என்று பாடவே தோன்றுகிறது.

Next Story