முல்லை நிலங்களைக் காட்டி கொள்ளை கொண்ட தமிழ்ப்படங்கள் - ஒரு பார்வை

by sankaran v |   ( Updated:2022-11-02 18:26:25  )
முல்லை நிலங்களைக் காட்டி கொள்ளை கொண்ட தமிழ்ப்படங்கள் - ஒரு பார்வை
X

Vanamagan2

தமிழ்சினிமாவில் காடுகளைப் பற்றிய படங்களைப் பார்ப்பதற்கு என்றால் அலாதி பிரியம் தான். காடுகளும் காடுகள் சார்ந்த இடங்களையும் தமிழ் இலக்கியத்தில் முல்லை என்று அழைப்பார்கள்.

அந்த நிலங்களில் நமக்கு அதிகமாக பரீட்சயம் கிடையாது என்பதால் அங்கு தான் அடிக்கடி டூர் போட்டு போவோம். அது போன்ற இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் வரும்.

அதுபோன்ற இடங்களைக் காண முடியாதவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் வகையில் பல தமிழ்ப்படங்கள் வந்துவிட்டன. அவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.

கேப்டன் பிரபாகரன்

Captain Prabakaran

சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்தப்படத்தில் வீரப்பன் ஒளிந்துள்ள இடம் காடு என்பதால் படத்தின் பெரும்பாலான காட்சி சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளன. விஜயகாந்த் நடிப்பில் மெகா ஹிட்டான படம்.

இந்தப்படத்தில் வன இலாகா அதிகாரி பிரபாகரனாக நடித்து அசத்தியுள்ளார் விஜயகாந்த். மன்சூர் அலிகான் வீரப்பத்ரன் ஆக நடித்து அசத்தியுள்ளார். சரத்குமார், நம்பியார், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலரும் நடித்துள்ளனர். இளையராஜாவின் பின்னணி இசை அருமை. படம் வெளியான ஆண்டு 1991.

கும்கி

Kumki

பிரபு சாலமன் இயக்கத்தில் 2012ல் வெளியாக அதிரிபுதிரி வெற்றி பெற்ற படம் கும்கி. நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தம்பி ராமையா, லட்சுமி மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் தெறிக்கவிட்டன. காடுகளில் உள்ள மக்களின் பிரச்சனைகள் மற்றும் யானைகளின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

கடம்பன்

Kadamban

என்.ராகவன் இயக்கத்தில் 2017ல் வெளியான படம். ஆர்யா, கேத்ரின் தெரசா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் மிரட்டலான இசை படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.

காடுகளை வைல்ட் ஆங்கிளில் படமாக்கப்பட்டு இருக்கும் விதம் அருமையாக இருக்கும். காட்டை நேசித்து அதை கயவர்களிடம் இருந்து காக்கும் ஒரு கடம்பனின் கதை.

காடன்

Kadan Movie

2021ல் வெளியான இந்தப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். ராணா டக்குபதி, விஷ்ணு விஷால் உள்பட பலர் நடித்துள்ளனர்.

காடுகளையும் காடுகளைச் சார்ந்த இடங்களையும் வெகு அழகாகக் காட்டியுள்ளார்கள். வீரபாரதியாக வரும் ராணா டக்குபதி தான் படத்தில் காடன். ரொம்ப சூப்பரான நடிப்பு. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியானது. படத்தில் யானையை அழகாக எடுத்துள்ளார்கள்.

வனமகன்

ஏ.எல்.விஜயின் நடிப்பில் 2017ல் வெளியான சூப்பர்ஹிட் படம். ஜெயம் ரவி, சாயிஷா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, வருண் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். காட்டைக் காவல் காக்கும் கதாநாயகனின் கதை இது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சூப்பர்.

Next Story