கெஸ்ட் ரோலில் பின்னிப் பெடல் எடுத்த நடிகர்கள் - ஒரு பார்வை

தமிழ்சினிமாவில் கெஸ்ட் ரோலில் நடிகர்கள் வந்தால் அதுவும் பிரபலமான நடிகர்கள் என்றால் அந்தப் படத்தை விரும்பிப் பார்க்கச் செல்வர்.

அந்த அபிமான நடிகர் ஒரு சீனுக்கு வந்தாலும் அந்த படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பர். அப்படிப்பட்ட ரோல் அந்;தப் படத்தையே ஒரு தூக்கு தூக்கி விடும். படத்தை வெற்றிப்படமாக்கி விடும். அப்படிப்பட்ட கெஸ்ட் ரோல் கொண்ட சில படங்களைப் பார்ப்போமா...

பார்த்தாலே பரவசம்

parthale paravasam

கே.பாலசந்தரின் இயக்கத்தில் 2001ல் இந்தப் படம் வெளியானது. மாதவன், சிம்ரன், சினேகா, விவேக், மணிவண்ணன், நிழல்கள் ரவி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் கமல் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். கே.பாலசந்தருக்கு இது 100வது படம். கமல் நடித்ததற்காக இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தாயில்லாமல் நானில்லை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். கமல், ஸ்ரீதேவி, நாகேஷ், சுருளிராஜன், சச்சு உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் பிச்சுவா பக்கிரி என்ற சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார்.

சம்சாரம் அது மின்சாரம்

Samsaram athu minsaram

இயக்குனர் விசு இயக்கி நடித்த அற்புதமான குடும்பப் படம் சம்சாரம் அது மின்சாரம். 1986ல் வெளியானது.

ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.
கிஷ்மு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படம் மெகா ஹிட்.

தேவன்

Devan movie

அருண்பாண்டியன் இயக்கத்தில் 2002ல் வெளியான படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். அருண்பாண்டியன், விஜயகாந்த், சாய்குமார், மீனா, கௌசல்யா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படம் செம ஹிட்.

மைக்கேல் மதன காமராஜன்

kamal, delhi ganesh

கமல், ஊர்வசி, குஷ்பூ நடிக்க 1990ல் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய படம். இந்தப் படத்தில் டெல்லி கணேஷ் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தினார். பாலக்காட்டு மணி அய்யராக வந்து அனைவரின் உள்ளங்களையும் கவர்கிறார்.

தாவணிக்கனவுகள்

Dhavani Kanavugal Bharathiraja

இந்தப் படத்தின் இயக்குனர் பாரதிராஜா கெஸ்;ட் ரோலில் நடித்து அசத்தினார். ரிக்ஷா மாமா படத்திற்காக வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் கெஸ்ட் ரோல் தான். ஆனால் படம் பட்டையைக் கிளப்பியது அல்லவா?

 

Related Articles

Next Story