இனிக்கும் இரவில் கேட்கவேண்டிய இன்னிசை கானங்கள்...

by sankaran v |
இனிக்கும் இரவில் கேட்கவேண்டிய இன்னிசை கானங்கள்...
X

Rajni and deepa in Johny

மனித மனத்தை ஆசுவாசப்படுத்த வேண்டுமானால் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் அதற்குப் பிடித்தமான ஒரு செயலை செய்ய வேண்டும். அவற்றில் எளிதானது என்னவென்றால் இன்னிசை கேட்பது.

அதுவும் அமைதி தவழும் இரவுப்பொழுதில் நித்திரை வருட வேண்டுமானால் இதுபோன்ற இனிமையான இசையைக் கேட்பது உள்ளத்துக்கு மட்டுமின்றி உடலுக்கும் நலம் பயக்கும். அப்படிப்பட்ட அற்புதமான பாடல்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம். வாய்ப்பு இருந்தால் நீங்களும் இவற்றைப் பதிந்து கேட்டுப்பாருங்கள்.

செனோரீட்டா ஐ லவ் யூ...

ஜானி படத்திற்காக இந்தப் பாடல் களமிறங்கியது. பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப்பாடலைக் கேட்கும்போது ரசிகனுக்குள் ஒரு புத்துணர்வு பீறிட்டு எழுவதைக் காணலாம். ரஜினிகாந்த், தீபாவின் தெறிக்க விடும் ஜோடி பாடல். இப்போது கேட்டாலும், பார்த்தாலும் நமக்குள் சொல்லவொணாத ஒரு இன்பம் எழும் என்பது நிதர்சனம்.

இதே படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான என் வானிலே ஒரே வெண்ணிலா பாடலும் ரசிகர்களின் உள்ளங்களைப் புரட்டிப்போட்டது. இந்தப்பாடலில் ரஜினியும், ஸ்ரீதேவியும் நடித்து அசத்தியிருப்பார்கள். 90களில் இளையராஜா இளையராஜா தான் என்று சொல்லி சொல்லி சிக்சர் அடித்துள்ளார்.

ஒரு காதல் வந்தது...

prabhu , Nathiya in Chinnatambi Periya thambi

சின்னதம்பி பெரிய தம்பி படத்தில் தான் இந்த இனிய பாடல் இடம்பெறுகிறது. பிரபுவும், நதியாவும் ஆடி பாடும் ஜோடி பாடல் இது.

பாடலின் ரம்மியமான இசையில் ராகதேவன் இளையராஜா கொள்ளை கொள்கிறார். இரவில் கேட்க வேண்டிய இனிய கானம் இது. இந்தப்படத்தில் சத்யராஜூம் பிரபுவும் இணைந்து நடித்துள்ளார்கள்.

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

அண்ணா நகர் முதல் தெரு படத்திற்காக இந்தப் பாடல் என்று அந்தக்கால வானொலிகளில் ஒலிபரப்பி ரசிகர்களின் தூக்கத்தைக் கலைத்து ரசிக்க வைத்த பாடல் இது. சத்யராஜ், ராதா இணைந்து பாடும் டூயட் பாடல் இது. மறக்கமுடியாத மெல்லிசையைக் கொண்ட பாடல் இது.

மனம் எவ்வளவு பாரமாக இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்டால் போதும். நமக்குள் ஒரு புதுவித பரவசம் ஏற்படும். 1988ல் வெளியான இந்தப்படத்திற்கு இசை அமைத்து இருப்பவர் சந்திரபோஸ். இவரது படங்களில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் மறக்காமல் ஹிட் அடிக்கத் தவறுவதில்லை.

வளையோசை கலகலவென

kamal, amala in sathya

சத்யா படத்திற்காக இந்த இனிய பாடல் இடம்பெற்றுள்ளது. கமல், அமலா நடிப்பில் வெளியான அற்புதமான படம் இது. இளையராஜாவின் இன்னிசை மழையில் நம்மை நனைய வைத்திருக்கும் பாடல் இதுதான்.

படத்திலும் பார்க்கும் போது கமல், அமலா ஜோடி அற்புதமாக நடித்து இருப்பார்கள். அந்தக்கால ரசிகர்களைக் கொண்டாட வைத்த பாடல். இனிய இரவுப் பொழுதை இனிமையாக்கும் பாடல் இது என்றால் மிகையில்லை.

டார்லிங் டார்லிங் டார்லிங்

பிரியா படத்திற்காக ரஜினி, ஸ்ரீதேவி இணைந்து நடித்த பாடல் தான் இது. டார்லிங் டார்லிங் டார்லிங். ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ என்று வரும். என்னை விட்டுப் போகாதே. மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்.

என்றும் உன்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்... ஐ லவ் யூ....என அழகான வரிகளில் பாடல் வரும். பி.சுசீலாவின் இனிய குரலில் பாடல் மேலும் மெருகுபெறும்.

Next Story