மதுரையை மையமாகக் கொண்ட அதிரி புதிரி வெற்றி பெற்ற தமிழப்படங்கள் - ஒரு சிறப்பு பார்வை
தமிழகத்தில் எந்த நடிகரின் படமானாலும் சரி. மதுரையில் ஓடினால் போதும். தமிழகம் முழுவதும் மெகா ஹிட்டாகி விடும் என்பார்கள். அங்குள்ள ரசிகர்கள் தான் படத்தை இம்மி இம்மியாக ரசிப்பார்களாம்.
அவர்களின் ரசனை தான் பெரும்பாலான தமிழக ரசிகர்களுக்கும் உண்டு. அதனால் தான் அங்கு ஓடிய படங்கள் அனைத்தும் ஏ, பி, சி ஆகிய சென்டர்களிலும் ஓடி சாதனை படைத்து விடுகின்றன.
மதுரையிலேயே படம் எடுத்தால் ஓடுமா என்றால் ஓடத்தானே செய்யும். படத்தின் கதையைப் பொருத்துத் தான் படம் எங்கு எடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் இப்போது மதுரையைக் கதைகளமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சில படங்களைப் பார்ப்போம்.
சுப்பிரமணியபுரம்
2008ல் சசிக்குமாரின் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம். ஜேம்ஸ் வசந்தனின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. சசிக்குமார், ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர். அனைத்துக் கதாபாத்திரங்களும் யதார்த்தம் மீறாமல் இயல்பாக நடித்திருந்தனர்.
80களில் உள்ள மதுரை மக்களின் இயல்பு வாழ்க்கை முறைகளை படம் அருமையாக சித்தரித்திருந்தது. கண்கள் இரண்டால் பாடல் செம ஹிட்டானது. மதுர குலுங்க, காதல் சிலுவையில், தேனீரில் சிநேகிதம் ஆகிய பாடல்கள் உள்ளன.
கொம்பன்
2015ல் முத்தையாவின் இயக்கத்தில் வெளியான அதிரடி படம். கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன், கோவை சரளா, கருணாஸ். கு.ஞானசம்பந்தன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள் அனைத்தும் மதுரையை மையமாகக் கொண்டவை. செம ஹிட்டானது.
அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படம். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் அருமை. கம்பிக்கரை வேட்டி, அப்பப்பா, கருப்பு நிறத்தழகி, மெல்ல வளைஞ்சது ஆகிய பாடல்கள் உள்ளன.
பாண்டியநாடு
சுசீந்திரன் இயக்கயி படம். விஷால், பாரதிராஜா, லட்சுமி மேனன், சூரி, விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் பாடல்கள் அதகளப்படுத்துகின்றன.
ஏலே ஏலே மருது, பை பை பை கலாச்சி பை, ஒத்தக்கட ஒத்தக்கடை மச்சான், வெறிகொண்ட புலி ஒன்று, டையாரே டையாரே ஆகிய பாடல்கள் உள்ளன.
பண்ணையாரும் பத்மினியும்
2014ல் வெளியான இப்படத்தை அருண்குமார் இயக்கினார். விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சினேகாவும், அட்டகத்தி தினேஷ்சும் படத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். எங்க ஊரு வண்டி, உனக்காக பிறந்தேனே, காதல் வந்தாச்சோ, பேசுறேன் பேசுறேன், எனக்காக பொறந்தாயே ஆகிய பாடல்கள் உள்ளன.
விருமாண்டி
2004ல் கமல் எழுதி இயக்கிய படம். இது அவரது சொந்தப் படைப்பு. கமலுடன் நெப்போலியன், பசுபதி, அபிராமி, கு.ஞானசம்பந்தன், ரோகிணி, சண்முகராஜன், காந்திமதி, பாலாசிங், நாசர், ராஜேஷ், பெரிய கருப்பு தேவர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜா இசை அமைத்துள்ளார். ஒன்னவிட, அன்னலெட்சுமி கண்ணசச்சா, நெத்தியில பொட்டு வச்சு, மாடவிளக்கே, கருமாத்தூர் காட்டுக்குள்ளே, அந்த காண்டாமணி, கொம்புல பூவ சுத்தி, கர்ப்பக்கிரகம் விட்டு சாமி வெளியேறுது, சண்டியரே சண்டியரே ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.