நிலவு பெயரில் வெளியாகி மனதைத் திருடிய சூப்பர்ஹிட் தமிழ்ப்படங்கள் – ஓர் பார்வை

Published on: March 16, 2022
---Advertisement---

நிலவை மையமாகக் கொண்டு தமிழ்ப்படங்களில் ஏராளமான பாடல்கள் வந்துள்ளன. நிலாக்காயும் நேரம், வான் நிலா நிலா, இளைய நிலா பொழிகிறதே, கல்யாண தேன் நிலா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நிலவை சேர்த்து கவி பாடாத கவிஞர்களே இருக்க முடியாது. நிலா என்றாலே அழகும், அமைதியும், குளிர்ச்சியும் நிறைந்தது. அதனால் தான் முழு நிலவை நாம் பௌர்ணமியாக கொண்டாடுகிறோம்.  படங்களின் பெயர்களிலேயே நிலா சேர்ந்துள்ளது. இந்தப்படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சந்திரோதயம்

1966ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கே.சங்கர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.

எங்கிருந்தோ ஆசைகள், காசிக்கு போகும், சந்திரோதயம், புதியதோர் உலகம், கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம், புத்தன் ஏசு, காந்தி பிறந்தது ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

பகல் நிலவு

1985ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம். முரளி, ரேவதி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

மைனா மைனா, நீ அப்போது, பூ மாலையே, பூவாலே மேடை, வாரோயோ வான்மதி, வைதேகி ராமன் ஆகிய பாடல்கள் உள்ளன.

நிலவே மலரே

nilave malare

1986ல் வெளியான இப்படத்தை சந்திரசேகர் இயக்கியுள்ளார்.

பேபி ஷாலினி, நதியா, ரகுமான், மனோரமா, செந்தில், ராஜேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர், எம்.என்.ராஜம் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். மண்ணில் வந்த நிலவே, அம்மா அப்பவும் இல்லை, மாலை பொன்னான, சொந்தங்களை ஆகிய பாடல்கள் உள்ளன.

இந்திரன் சந்திரன்

1990ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் சுரேஷ்கிருஷ்ணா. திரைக்கதை எழுதியவர் கமல்ஹாசன். வசனம் எழுதியவர் கிரேசிமோகன். கமல், விஜயசாந்தி, ஸ்ரீவித்யா, நாகேஷ், சரண்ராஜ், குயிலி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசை அமைத்துள்ளார். காலேஜ் டிகிரியும், காதல் ராகமும், ஆரிரோ ஆரிரோ, நூறு நூறு முத்தம், அடிச்சிடு கொட்டம் ஆகிய பாடல்கள் உள்ளன.

நிலா

nila jayram, vinitha

1994ல் வெளியான படத்தை நம்பிராஜன் இயக்கியுள்ளார். தேவாவின் இசையில் தெவிட்டாத பாடல்கள் உள்ளன.

ஜெயராம், வினிதா, காந்திமதி, யுவராணி, பொன்னம்பலம், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலே இடி இடிக்கும், ராசா மேல ஆசை, ருக்கு நம்ப, நாய்டு ஹலோ ஆகிய பாடல்கள் உள்ளன.

மேற்கண்ட படங்கள் தவிர மஞ்சள் நிலா, பிள்ளை நிலா , கருப்பு நிலா, நிலா காய்கிறது, நிலா காலம், இளமை நிலா, சிவப்பு நிலா, சந்திரமுகி ஆகிய படங்களும் உள்ளன.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment