More
Categories: Cinema History Cinema News latest news

இவர் மட்டும் நம்ம புரட்சித்தலைவருடன் நடித்திருந்தால் இவரது ரேஞ்சே வேற லெவல் தான்…! வடை போச்சே…!!!

வட்டவடிவழகி, காந்தக்கண்கள், அழகான சிரிப்பு என தனக்கே உரிய அடையாளங்களுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். 1970 முதல் 2000 வரை தமிழ்சினிமாவில் இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து நடிப்பில் ஜொலித்தார்.

தாய்க்குலங்களின் பேராதரவைப் பெற்ற நடிகையான இவர் சினிமாவில் எவ்வித ஆபாசமான வசனங்களோ கவர்ச்சியோ இன்றி திறம்பட நடித்தார். இவர் படத்தில் நடித்து விட்டால் இவரைப் பார்ப்பதற்கென்றே பலரும் திரையரங்கிற்கு வருவார்கள். அழகு மட்டுமின்றி நடிப்பிலும் ஜொலிப்பார் நடிகை ஸ்ரீவித்யா. இவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

Advertising
Advertising

Ttiruvarutselvar

இயக்குனர் ஏ.பி.நாகராஜனின் திருவருட்செல்வர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீவித்யா. அடுத்து அவர் ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடியாக நடித்த மூன்றெழுத்து படத்தில் நடித்தார். தொடர்ந்து அவர் பருவப்பெண்ணாக நடித்த முதல் படம் நூற்றுக்கு நூறு.

தமிழில் அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் டெல்லி டூ மெட்ராஸ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அபூர்வ ராகங்கள் படத்தில் ஜோடியாக நடித்து அசத்தினார். ஆனால் மாப்பிள்ளை படத்தில் அவருக்கு மாமியாராகவும், உழைப்பாளி படத்தில் அவருக்கு அக்காவாகவும், தளபதி படத்தில் அவருக்கு அன்னையாகவும் நடித்து அனைவரது விழிகளையும் விரிய வைத்தார்.

கார்த்திக்கின் 100வது படமான அமரனில் சண்டபஜாரே என்ற பாடலை சொந்தக்குரலில் பாடினார் ஸ்ரீவித்யா. இவர் புகழ்பெற்ற இசைக்குயில் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஸ்ரீவித்யா. தொடர்ந்து இவர் பாடல்கள் பாடவில்லை.

srividya

திரை உலகில் வெற்றிகரமான நடிகையாக ஸ்ரீவித்யா வளர்ந்தபோதும் எந்தவித பந்தாவும் இல்லாமல் இருந்தார். தனது 17வது வயதில் 57 வயது நாயகனுக்கு ஜோடியாக நடித்து வியக்க வைத்தார். இது மலையாளப்படத்தில் இப்படித்தான் அறிமுகமானார். இவர் அதிகமாக நடித்த படமும் மலையாளத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கே.பாலசந்தரின் நான்கு சுவர்கள் என்ற படத்தில் ஸ்ரீவித்யா அறிமுகமானார். அதே போல் தமிழில் இவர் தனது 23 வயதில் ஒரு பருவப்பெண்ணிற்குத் தாயாக நடித்தார். இதுதான் ரஜினியின் அறிமுகப்படமான பாலசந்தரின் அபூர்வ ராகங்கள்.

கமலும், ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் படம் சொல்லத்தான் நினைக்கிறேன். கமல், ஸ்ரீவித்யா ஜோடியின் அதிசய ராகம், ஆனந்த ராகம் பாடல் இன்று வரையிலும் ரசிகர்களால் மிகவும் பேசப்படும் பாடல். இது இடம்பெற்ற படம் அபூர்வ ராகங்கள்.

கமலுடன் புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், காதலா காதலா என தொடர்ந்து பயணித்தார் ஸ்ரீவித்யா.

டி.ராஜேந்தருக்கு பிடித்தமான நடிகையாகவும் ஸ்ரீவித்யா அவரது படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். என் தங்கை கல்யாணி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம் ஆகிய படங்களைச் சொல்லலாம். புற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டார். தன் ரசிகர்கள் தனக்காக பரிதாபப்பட்டுவிடக்கூடாது என தனது இறுதி நாட்களை கேரளாவில் கழித்தார்.

Actress srividya

நோய்வாய்ப்பட்ட அந்த நேரத்தில் யாரையுமே பார்க்க மறுத்த ஸ்ரீவித்யா நடிகர் கமலை மட்டும் பார்க்க அனுமதித்தார். மருத்துவமனையை விட்டு வெளியே சோகமாக வந்த கமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் நிலையைக் குறித்து வெளியே சொல்வது அநாகரிகம் என கருதினார்.

தனது ஏராளமான சொத்துக்களை போதிய வசதியும், ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்டவர்களின் நலத்திட்டத்திற்காக அறக்கட்டளையாக நிர்வகித்து வந்தார் ஸ்ரீவித்யா. ஆனால் அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் ஸ்ரீவித்யாவின் இறுதிகாலகட்டத்தில் கூட அவருக்காக செலவழிக்க முன்வரவில்லை.

மக்கள் திலகம் எம்ஜிஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த ரகசிய போலீஸ் 115ல் எம்ஜிஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார் ஸ்ரீவித்யா. அப்போது அவர் மிகச்சிறிய பெண்ணாக இருந்ததால்தான் கிடைக்கவில்லையாம். அதன்பிறகு எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா 2006ல் காலமானார்.

Published by
sankaran v

Recent Posts