சிவாஜிபுரொடக்ஷன் தயாரிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள் - ஒரு பார்வை
சிவாஜி புரொடக்ஷன் நிறுவனம் 1970ல் தொடங்கப்பட்டது. தமிழ்த்திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு பல வெற்றிப்படங்களைத் தந்துள்ளது.
இந்தப்படங்களில் அவரது குடும்பத்தில் இருந்து சிவாஜியோ அல்லது பிரபுவோ நடித்து இருப்பார்கள். அவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.
அறுவடை நாள்
1986ல் ஜி.எம்.குமார் இயக்கிய படம். பிரபு, பல்லவி, ராம்குமார், ஆர்.பி.விஸ்வம், வடிவுக்கரசி, குமரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். இன்னிசை இளையராஜா. பாடல்களை எழுதியவர் கங்கை அமரன். சின்னப்பொண்ணு, தேவனின் கோவில், மேளத்தை மெல்ல, நாங்க, ஓல குருத்தோல, ஒரு காவியம், வாக்கப்பட்டு ஆகிய பாடல்கள் உள்ளன.
சந்திப்பு
1993ல் சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம் சந்திப்பு. சிவாஜி, பிரபு, ராதா, ஸ்ரீதேவி, மேஜர் சுந்தரராஜன், சத்யராஜ், சரத்பாபு, மனோரமா, விஜயகுமார், வடிவுக்கரசி, காந்திமதி, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
ராத்திரி நிலவில், அடி நான் வாங்கி வந்தேனடி, இது ஆனந்தம் விளையாடும் வீடு, வார்த்தை நானடி கண்ணம்மா, சோலப்பூர் ராஜா, மாங்கல்யம் தவழும், உன்னைத்தான் கும்பிட்டேன், உன்னையே நம்பிட்டேன் ஆகிய பாடல்கள் உள்ளன.
வெற்றிவிழா
1989ல் பிரதாப் போத்தன் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம். கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பு, சலீம் கௌஸ், டிஸ்கோசாந்தி, வி.கே.ராமசாமி, சௌகார் ஜானகி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
மாறுகோ, மாறுகோயீ, பூங்காற்றே உன் பேர் சொல்ல, தத்தோம், வானம் என்ன, சீவி சினுக்கெடுத்து ஆகிய பாடல்கள் உள்ளன.
மன்னன்
1992ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பி.வாசு. ரஜினிகாந்த், பிரபு, குஷ்பு, விஜயசாந்தி, மனோரமா, பண்டரிபாய், கவுண்டமணி, விசு உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜாதி ராஜா, அடிக்குது குளிரு, கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு, மன்னர் மன்னனே ஆகிய பாடல்கள் உள்ளன.
கலைஞன்
1993ல் ஜி.பி.விஜய் இயக்கிய படம். கமல், பிந்தியா, நாசர், சிவரஞ்சனி, நிர்மலா, சிந்துஜா, யுவஸ்ரீ, அம்ருதா, ராஜாத்தி, சின்னி ஜெயந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்திரஜித், எந்தன் நெஞ்சில், கலைஞன், கொக்கரக்கோ கோழி, தில்லுபரு ஜானே ஆகிய பாடல்கள் உள்ளன. இது விறுவிறுப்பான கிரைம் ஸ்டோரி. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.
சந்திரமுகி
2005ல் சிவாஜி, ரஜினி, பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். தேவுடா தேவுடா, கொக்கு பற பற, அத்திந்தோம் திந்தியும், கொஞ்ச நேரம், ராரா...சரசக்கு ராரா ஆகிய பாடல்கள் உள்ளன.
இந்தப்படத்தில் சந்திரமுகியாக வரும் ஜோதிகாவின் விஸ்வரூப நடிப்பைப் பார்த்து ரசிக்கலாம். இந்தப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது.
அசல்
2010ல் சரண் இயக்கத்தில் வெளியான படம். அஜித்குமார், சமீரா ரெட்டி, பாவனா, பிரபு, ராஜீவ் கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். அசல், குதிரைக்கு தெரியும், டொட்டொடய்ங், எங்கே எங்கே, துஷ்யந்தா, எம் தந்தை ஆகிய பாடல்கள் உள்ளன.