சந்திரபாபுவின் வாய்ப்பைத் தட்டிப் பறித்த சிவாஜி....படத்திற்கு விளம்பரமோ அபாரம்...!

by sankaran v |
சந்திரபாபுவின் வாய்ப்பைத் தட்டிப் பறித்த சிவாஜி....படத்திற்கு விளம்பரமோ அபாரம்...!
X

Paavamannippu

1960ம் ஆண்டு ஒரு படம் வெளியானது. அது சிவாஜி நடித்த பாவமன்னிப்பு. இப்படி ஒரு படமா என ரசிகர்கள் சிலாகித்துப் பார்த்தனர். அந்தப்படம் எப்படி உருவானது? அந்தப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

சந்திரபாபு கதை

இயக்குனர் பீம்சிங் சந்திரபாபுவை வைத்து ஒரு படம் இயக்கினார். அதன் பெயர் அப்துல்லா. கொஞ்ச படமும் எடுத்தாயிற்று. கதை எழுதியவர் சந்திரபாபு. அதை ஏவிஎம் சரவணனிடம் போட்டுக் காட்டினார்.

அதாவது படத்தின் நாயகன் ஒரு இந்து. முஸ்லீமால் வளர்க்கப்படுகிறான். கிறிஸ்தவப்பெண்ணை மணம் முடிக்கிறான். இதுதான் கதை. ஆனால் படத்தின் திரைக்கதை சரியாக வரவில்லை. படம் முழுவதையும் ரீமேக் பண்ணனும் என்றார்.

Paavamannippu

ஆனால் அந்தக் கதையின் கரு ஏவிஎம் சரவணனுக்கு பிடித்துப் போனது. தந்தையிடம் சொல்லி படத்தை எடுக்க வைத்தார். வரும் லாபத்தில் சமபங்கு என்றதும் பீம்சிங்கும் இதற்கு சம்மதித்தார். உடனே அப்துல்லா கதை...திரைக்கதையை பீம்சிங்கும் அவரது குழுவினரும் வடிவமைத்து வந்தனர்.

ஒரு நாள் ஏவிஎம் சரவணன் பீம்சிங்கிடம் கதை எப்படி வந்துருக்குன்னு கேட்டார். கதை ரொம்ப அருமையா வந்துருக்கு. ஹீரோ கேரக்டர் பிரமாதமா வந்துருக்கு. ஆனா அதற்கு சந்திரபாபு தாங்க மாட்டார். சிவாஜியை வைத்துத் தான் எடுக்கணும்னு சொன்னார்.

கண்ணாம்பா காலமானார்

பீம்சிங் சந்திரபாபுவிடமும் இதைப் பற்றி சொல்லிவிட்டார். படமும் பிரமாதமாக வளர்ந்து வந்தது. திட்டமிட்டபடி 26.10.1960ல் படம் வெளியாகணும். ஆனால் முடியும் நேரத்தில் நடிகை கண்ணாம்பா காலமானார்.

Paavamannippu

பிறகு எம்.வி.ராஜம்மாவை வைத்து படத்தை எடுத்து முடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. அப்போது இலங்கை வானொலியில் இந்தப்படத்தின் பாடல்கள் அடிக்கடி ஒலிப்பரப்பாயின.

அபார விளம்பரம்

படம் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் ஒவ்வொரு காட்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப்படம் சென்னை சாந்தி தியேட்டரில் போடப்பட்டது. படம் வெள்ளிவிழா கண்டது. அப்போது ஒரு ராட்சத பலூனை ஜப்பானில் இருந்து வரவழைத்தனர்.

அதை சாந்தி தியேட்டருக்கு மேல் பறக்க விட்டு அந்தப் படத்திற்கான விளம்பரம் செய்தனர். அந்தப் பலூனில் ஏவிஎம் என்ற ஆங்கில எழுத்துகள் பெரிதாக இருந்தன. வாலில் பாவ மன்னிப்பு என்ற எழுத்துகள் ஒன்றன் கீழ் ஒன்றாக தமிழில் இருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் அதை அண்ணாந்து பார்த்து ஆச்சரியத்துடன் சென்றனர்.

பாட்டுப் போட்டி

படம் வெளியானதும் ரசிகர்களுக்குப் பாட்டுப் போட்டி வைத்தனர். அதன்படி பாடல்களில் ரசிகர்கள் தங்கள் ரசனைப்படி வரிசைப்படுத்த வேண்டும். அதற்கான கடிதங்கள் வந்து மலை போல் குவிந்து விட்டன. அந்த சிறப்புக்குரிய வரிசை இவை தான்.

Paavamannippu

அத்தான் என்னத்தான், வந்த நாள் முதல், காலங்களில் அவள் வசந்தம், பாலிருக்கும் பழமிருக்கும், ஓவியம் கலைந்ததென்று, எல்லோரும் கொண்டாடுவோம் ஆகிய பாடல்கள் தான் வரிசை. இது தமிழ்த்திரை உலகுக்குப் புதுசு. வெற்றி பெற்றவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Next Story