Connect with us

Cinema History

புதினங்களில் இருந்து வந்த அசத்தலான சினிமாக்கள் – ஒரு பார்வை

தமிழ்ப்படங்களில் பல சிறந்த எழுத்தாளர்களின் நாவல்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில வெற்றியும் பெற்று விட்டது. அப்படிப்பட்ட சினிமாக்களை இப்போது பார்க்கலாம்.

தில்லானா மோகனாம்பாள்

அந்தக்காலத்தில் சிவாஜி பத்மினி காம்பினேஷனில் சக்கை போடு போட்ட படம். இதுவும் ஒரு நாவல் கதையைத் தழுவியது தான். அதென்ன நாவல் என்கிறீர்களா? கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவல் தான்.

சில நேரங்களில் சில மனிதர்கள்

பிரபலமான இந்தப்படம் 1976ல் வெளியானது. இயக்குனர் பீம்சிங். ஸ்ரீகாந்த், லட்சுமி, நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.

முள்ளும் மலரும்

எழுத்தாளர் உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் தான் முள்ளும் மலரும்.

ரஜினிகாந்த், ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். படம் அந்தக்காலத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆளவந்தான்

aalavanthan kamal

கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படம் ஒரு நாவலை மையமாகக் கொண்ட கதை தான். அந்த நாவலின் பெயர் தாயம். இரு மாறுபட்ட தோற்றங்களில் வந்து கமல் அசத்தினார்.

படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை. படத்தின் சண்டைக்காட்சிகளோ ஹாலிவுட்டுக்கே சவால் விடும் அளவில் இருந்தது.

விசாரணை

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான படம் விசாரணை. இதுவும் ஒரு நாவலை மையமாகக் கொண்டு உருவான கதைதான். ஆட்டோசந்திரன் எழுதிய லாக்கப் நாவல் தான் அது.

இந்தப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அட்டக்கத்தி கணேஷ், ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற படம்.

அசுரன்

asuran

வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன். இந்தப்படம் வலி நிறைந்த மனிதர்களின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டியது. எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அசுரன்.

தனுஷ் இந்தப்படத்தின் கதாநாயகனாக நடித்து முழு படத்திற்கும் ஆணிவேராய் நின்று வெற்றிக்கனியைக் கொடுத்துள்ளார். தேசிய விருது பெற்ற படம்.

பொன்னியின் செல்வன்

கல்கி எழுதிய வரலாற்று காவியம். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் சினிமா படைப்பாக உருவாகி வருகிறது. படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், கார்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top