தமிழ்சினிமாவில் கோட்டை கட்டிய படங்கள் - ஓர் பார்வை
தமிழ்சினிமாவில் இரும்பு போன்ற உறுதிமிக்க தரமான பல படங்கள் வந்துள்ளன. அவை பெயரிலேயே கோட்டையைக் கொண்டுள்ளன என்பது தான் ஆச்சரியம். அப்படிப்பட்ட படங்களைப் பட்டியலிட்டுப் பார்ப்போமே...
வஞ்சிக்கோட்டை வாலிபன்
1958ல் வெளியான இந்தப்படதர்தை எஸ்.எஸ்.வாசன் இயக்கினார். ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா, பத்மினி, டி.கே.ராமச்சந்திரன், எஸ்.வி.சுப்பையா, தங்கவேலு, விஜயகுமாரி, தி.க.சண்முகம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் இடம்பெற்ற வைஜெயந்திமாலா, பத்மினியின் போட்டி நடனம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
சி.ராமச்சந்திரா இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள். கண்ணும் கண்ணும் கலந்து, வெற்றிவேல், வெண்ணிலவே வெண்ணிலவே, ராஜாமகள் ரோஜாமலர், எத்தனை கேள்வி, அம்மா அம்மா ஆகிய பாடல்கள் உள்ளன.
கோட்டை வாசல்
செல்வ விநாயகம் இயக்கத்தில் 1992ல் வெளியான படம் கோட்டை வாசல். இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தயாரித்தவர் மோகன் நடராஜன். இந்தப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். அருண்பாண்டியன், சுகன்யா, சரண்யா, கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர்.
தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். மன்னவனே, ஆத்திரத்தில், கை வச்சு, வாயா என், கோட்டை வாசலுக்கு ஆகிய பாடல்கள் உள்ளன.
செங்கோட்டை
ஆக்ஷன் கிங் அர்ஜூனின் நடிப்பில் இது ஒரு அதிரடி திரைப்படம்.
ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் சி.வி.சசிக்குமார் இயக்கிய படம் செங்கோட்டை. வித்யாசாகர் இசையில் அர்ஜூன், ரம்பா, மீனா, விஜயகுமார், வடிவேலு, ராஜன் பி.தேவ், ஆனந்த்ராஜ், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பூமியே பூமியே, பாடு பாடு, உச்சி முதல் பாதம், வெண்ணிலவே, வெள்ளி பூவே, விண்ணும் மண்ணும் ஆகிய பாடல்கள் உள்ளன.
மலைக்கோட்டை
2007ல் பூபதி பாண்டியன் இயக்கிய அதிரடி திரைப்படம். விஷால், பிரியாமணி, தேவராஜ், அஜய், ஆஷிஷ் வித்யார்த்தி, ஊர்வசி, காதல் தண்டபாணி உள்பட பலர் நடித்துள்ளனர்.
மணிசர்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. கந்தா கடம்பா, உயிரே உயிரே, ஓ பேபி, தேவதையே வா, ஏ ஆத்தா ஆகிய பாடல்கள் உள்ளன.
தம்பிக்கோட்டை
2011ல் ரமேஷ் இயக்கத்தில் வெளியான படம். நரேன், மீனா, பூனம் பஜ்வா, சங்கீதா, பிரபு, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர்.
டி.இமான் இசை அமைத்துள்ளார். தம்பிக்கோட்டை கனகா, உனக்காக உயிரை வைத்தேன், வா புள்ள, நூறாண்டு வாழ்க ஆகிய பாடல்கள் உள்ளன.