Cinema History
10 ஆண்டுகளில் வெளியான சூப்பர்ஹிட் த்ரில்லர் படங்கள் – ஒரு பார்வை
தமிழ்ப்படங்களில் இதுவரை வெளிவராத முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்கள் தான் இவை. எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு டென்சனோடு ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல ரிலாக்ஸ் தரும் படங்கள் இவை.
துப்பறியும் திறன் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதற்கென்று கொஞ்சமாவது மெனக்கிட வேண்டும். சரி. நம்மால் தான் முடியவில்லை. படங்களைப் பார்த்தாவது கற்றுக் கொள்வோமே… வாங்க கடந்த 10 ஆண்டுகளில் வெளியான துப்பறியும் படங்களைப் பார்க்கலாம்.
துருவங்கள் 16
டி16 என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன். 2016ல் வெளியானது. ரகுமான் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்த படம் இது.
மெட்ரோ
2016ல் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம். ஸ்ரீஷ், பாபிசிம்ஹா, சென்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ளனர். திருடர்களிடமிருந்து பெண்கள் எப்படி தப்பிப்பது என்பதை சொல்லித் தரும் ஒரு விழிப்புணர்வு படம்.
8 தோட்டாக்கள்
2017ல் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான படம். வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
யுத்தம் செய்
2011ல் மிஷ்கின் இயக்கிய படம் யுத்தம் செய். சேரன், ஒய்.ஜி.மகேந்திரன், லட்சுமி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சேரன் நடித்த ஒரே த்ரில்லர் படம் இது. கொஞ்சம் ரூட்டை மாற்றித் தான் பார்ப்போமே என்று நடித்தார். ஆனால் படம் பிளாப் ஆகிவிட்டது. அதனால் தன் வழக்கமான பாதைக்கே திரும்பவும் சென்றுவிட்டார்.
நான்
2012ல் வெளியான படம். ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்து இசை அமைத்துள்ளார். சித்தார்த், வேணுகோபால் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியை வித்தியாசமாகக் காட்டிய படம்.
குற்றமே தண்டனை
2016ல் எம்.மணிகண்டன் இயக்கத்தில் வெளியான படம். விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் நாயகி கொல்லப்படுகிறாள். அந்தக் கொலைகாரன் யார் என்பதைக் கண்டறியும் படம்.
ஈரம்
2009ல் அறிவழகன் இயக்கத்தில் வெளியான படம். ஆதி, நந்தா, சிந்து மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். தண்ணீர் எப்படி பழிவாங்குகிறது என்பது தான் கதை. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
தெகிடி
2014ல் ரமேஷ் இயக்கிய படம். அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கொலையை மையமாகக் கொண்டு துப்பறியும் படம். படத்தின் தலைப்பே புரியாத புதிராக உள்ளதே என்ற கோணத்தில் என்ன தான் படத்தில் எடுத்திருக்கிறார்கள் என்பதப் பார்ப்பதற்காகவே பலரும் திரையரங்கிற்கு வந்தனர். அந்த வகையில் யாரையும் ஏமாற்றாமல் பலரையும் ரசிக்க வைத்தது இந்தப் படம்.
இதையும் படிங்க… விஜய் ஒன்னும் கேக்கவும் இல்ல.. கேப்டனை பார்க்க ஆசைப்பட வும் இல்ல! பிரேமலதா சொன்ன அந்த விஷயம்
அதே கண்கள்
2017ல் ரோகினி வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் படம். கலையரசன், ஜனனி உள்பட பலர் நடித்துள்ளர். இதே தலைப்பில் பழைய த்ரில்லர் படம் ஒன்றும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காளிதாஸ்
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கண் இமைக்காமல் பார்க்கச் செய்யும் படம். கணவன் மனைவியுடன் நேரத்தை கொஞ்சமாவது ஒதுக்கி செலவழிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற மன அழுத்தம் தான் உண்டாகும். இதில் பரத்தின் நடிப்பு பட்டையைக் கிளப்பும்.
இவை தவிர, சத்யா, வெள்ளை பூக்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், அந்தகாரம், கொலைகாரன், குரங்கு பொம்மை ஆகிய படங்களும் இந்த லிஸ்டில் உண்டு.