Connect with us

தலைப்பை வாசித்த உடனேயே பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிய படங்கள் – ஒரு பார்வை

Cinema History

தலைப்பை வாசித்த உடனேயே பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிய படங்கள் – ஒரு பார்வை

தமிழ்ப்படங்களில் பல படங்களின் தலைப்புகள் கேள்விக்குறியிலேயே வந்துள்ளன. அவற்றைப் பார்க்கும் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக அமைந்துள்ளன. படத்தின் தலைப்பைப் பார்;த்த உடனேயே படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன.

அதற்கேற்றாற் போல அழுத்தமான கதை அம்சமும் படத்தில் இடம்பெற்றுள்ளன. அத்தகைய படங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

பணமா, பாசமா?

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப்படத்தில் ஜெமினிகணேசன், சரோஜாதேவி, டி.கே.பகவதி, நாகேஷ், வி.எஸ்.ராகவன், சிவகுமார், சாரங்கபாணி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் வெளியான ஆண்டு 1968.

சின்னஞ்சிறு வீடு, மாறியது நெஞ்சம், மெல்ல மெல்ல, வாழைத்தண்டு போல, எலந்த பழம் ஆகிய பாடல்கள் உள்ளன. எல்.ஆர்.ஈஸ்வரியின் புகழ்பெற்ற பாடலான எலந்த பழம்…எலந்த பழம் பாடல் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளது.

குலமா, குணமா?

kulama kunama Sivaji, Padmini

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1971ல் வெளியான படம். சிவாஜிகணேசன், பத்மினி, ஜெய்சங்கர், வாணிஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர்.

கே.வி.மகாதேவனின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள். உலகில் இரண்டு கிளிகள், சொர்க்கத்தில் மயங்கும், மாதூரு ராமக்கா, முத்து மரகதமே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

யார்?

1985ல் வெளியான பயங்கர திகில் படம். சக்தி கண்ணனின் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த படம்.

அர்ஜூன், ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, நளினி உள்பட பலர் நடித்துள்ளனர். வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்துள்ளார்.

நீயா?

Neeya Movie kamal

1979ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் துரை. கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, லதா, சந்திரமோகன், விஜயகுமார், தீபா, முத்துராமன், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

முழு படமும் இச்சாத்திரி என்ற நாகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. நினைத்த நேரத்தில் நினைத்த உருவை எடுக்குமாம் இந்த பாம்பு. சுவாரசியத்தை அதிகப்படுத்தியது இந்த கதை.

சங்கர் கணேஷ் இசை அமைத்த படம். ஒரே ஜீவன், நான் கட்டின் மேலே, உன்னை எத்தனை, ஒரு கோடி ஆகிய பாடல்கள் உள்ளன. இதே படத்தின் 2ம் பாகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

யார் நீ?

1966ல் வெளியான இந்தப்படத்தை சத்யம் இயக்கினார். பி.எஸ்.வீரப்பா தயாரித்த படம். ஜெய்சங்கர், ஜெயலலிதா உள்பட பலர் நடித்துள்ளனர். வேதாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தன.

பார்வை ஒன்றே போதுமே, டிக்கிரிக்கி டிக்கிரிக்கி டாடாடா, என் வேதனையில், பொன்மேனி தழுவாமல், கண்ணுக்கென்ன சும்மா சும்மா, முள்ளில் ரோஜா துள்ளுதே ஆகிய இனிய பாடல்கள் உள்ளன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top