80ஸ் கிட்டுகளை அலற விட்ட நடிகர் யாருன்னு தெரியுமா? இப்ப பார்த்தாலும் வியர்க்கும்..!
குணச்சித்திர நடிகர் என்றால் நல்லவர், கெட்டவர், ஹீரோ, வில்லன், நகைச்சுவை நடிகர், அழுமூஞ்சி இப்படி பல குணங்களில் நடிக்கும் நடிகராக இருக்க வேண்டும். இதில் நாசர் மோசமான வில்லனாக பல படங்களிலும் அவ்வை சண்முகியில் நகைச்சுவை நடிக்கிறாகவும் நடித்து இருப்பார்.
ராதாரவி வில்லனாக நடிக்கும் போதே நகைச்சுவை செய்வார். இதில் விஜயகுமார், நிழல்கள் ரவி இருவரும் சீரியஸ் கேரக்டர்களுக்கு மட்டுமே சரியாக இருப்பார்கள். விஜயகுமார் ஆணவக்காரர், கோபக்காரர் கேரக்டருக்கே பொருந்துவார். ரவி மற்றவர்களை இன்சல்ட் செய்யும் பாத்திரத்திற்கு பொருந்துவார்.
நாகேஷ்
பழைய படங்கள் என்றால் சிறந்த குணாச்சித்திர நடிகராக நாகேஷை சொல்லலாம். ஹீரோ, வில்லன், நகைச்சுவை நடிகர், அப்பாவி, கொலைக்காரன், டாக்டர், நோயாளி, ஆசிரியர், மாணவர் என நடிக்காத கேரக்டர்களே கிடையாது.
எதிர் நீச்சல் திரைப்படத்தில் அவர் காட்டாத குணாதிசயமே கிடையாது. தில்லனா மோகனாம்பாள் படத்தில் அவரின் நகைச்சுவை வில்லன் காதப்பாத்திரம் பேசப்பட்டது. வடிவேலு, விவேக் இருவரும் நாகேஷின் காப்பிகள் தான். அவரிடம் பல கேரக்டர்களை உருவி நடித்திருப்பார்கள்.
கவுண்டமணி
கவுண்டமணி நகைச்சுவை நடிகர் என்றாலும் கொஞ்சம் வில்லத்தனம் கொண்ட நடிகர். சேலம் விஷ்ணு, அவசர போலீஸ் படங்களில் அவர் பெரிய வில்லனாக கலக்கி இருப்பார். இதில் நகைச்சுவையும் செய்தது பெரிய ஹம்ப்.
தமிழர்களுக்கு உலக அரசியலையும் உள்ளூர் அரசியலையும் பாடமெடுத்த அரசியல் மேதாவி. ஹீரோவாகவும் பல படங்களில் ஹீரோவையே ஓவர் டேக் செய்தும் நடித்திருப்பார்.
மணிவண்ணன்
மணிவண்ணன் கிட்டத்தட்ட கவுண்டமணியின் மறுபிம்பம் போல தான் இவரும். நிறைய வில்லத்தனம் கொண்ட நகைச்சுவை நடிகர். அவ்வப்போது அப்பாவியாகவும் வில்லனாகவும் மாறி மாறி நடிப்பார். உள்ளத்தை அள்ளித் தா படத்தில் காமெடியனாகவும் வில்லனாகவும் சிரிக்க வைத்திருப்பார்.
முதல்வன் படத்தில் இவர் கதாபாத்திரம் அதிகம் ரசிக்கும் படி இருக்கும். ஒரு புறம் அர்ஜுனை உசுப்பேற்றுவதும், ரகுவரனிடன் மாட்டிக் கொண்ட பின் காலில் விழும் போதும் வேறு பரிணாமங்களை காட்டி இருப்பார். அமைதிப்படை, மாமன் மகள், பட்ஜெட் பத்மனாபன் என பல படங்களில் இவரது நடிப்பு சிறப்பு.
ஆனந்தராஜ்
ஆனந்தராஜ் ஆரம்ப கால கட்டத்தில் கொடூர வில்லனாக 80ஸ் கிட்டுக்களை அலற விட்ட நடிகர். பிறகு நகைச்சுவை சேர்த்து நடிக்க வந்து நகைச்சுவை நடிக்கிறாகவே மாறி விட்டார். என்ன கேரக்டர் என்றாலும் சிறப்பாக செய்து விடுவார்.
பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் அப்படியே ஆனந்தராஜின் காபி என்றே சொல்லலாம். அவர் அளவிற்கு நகைச்சுவை வரா விட்டாலும் ஓரளவு செய்து விடுவார். பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், கிருஷ்ண வம்சி, பிரியதர்ஷன் என நல்ல இயக்குனர் கையில் சிக்க சூப்பர் நடிகர் ஆகி விட்டார்.