ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஒரு குறிஞ்சி மலர்!.. எஸ்.ஜே. சூர்யாவுக்கு புதிய பட்டம் கொடுத்த சூப்பர்ஸ்டார்!..

Rajinikanth praises Jigarthanda Double X - ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த ஷங்கர், லோகேஷ் கனகராஜ் என பல பிரபலங்கள் வரிசையாக பாராட்டி வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சும்மா இருப்பாரா? உடனடியாக படத்தை பார்த்து தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்திற்கு பிறகு 2 முறை கதை சொல்லியும் ரஜினி சார் ஓகே சொல்லல என புலம்பிய கார்த்திக் சுப்புராஜுக்கு சீக்கிரமே ரஜினியுடன் இணைந்து படம் பண்ணும் யோகத்தை இந்த படம் கொடுக்கும் என தெரிகிறது. அந்தளவுக்கு பெரிய பாராட்டை தெரிவித்துள்ள ரஜினிகாந்த் எஸ்.ஜே. சூர்யாவை நடிப்பு அரக்கன் எனும் பட்டத்தில் இருந்து இன்னொரு புதிய பட்டத்துக்கும் அப்கிரேட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: மாயா மேல ஏறி படுத்த பிக் பாஸ் போட்டியாளர்!.. ஏற்கனவே அவளப்பத்தி அப்படி சொல்றாங்க.. இதுல இதுவேறயா?..

”ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால இப்படியும் நடிக்க முடியுமா..? என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ். ஜே சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.

திருவோடு கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டுக்குரியது. திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ஏழு வருடங்கள் நடிக்காமல் இருந்த கமல்!.. உலக நாயகனுக்கு இப்படி ஒரு சோதனையா?…

இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்திருக்கும் விது அவர்களை எவ்வாறு பாராட்டினாலும் தகும். அற்புதம்.

இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரம்மிக்க வைக்கிறார். விஜய் டிவி கதை நேரம் வை சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். i am proud of you கார்த்திக் சுப்புராஜ் my hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் and team.

 

Related Articles

Next Story