குறி வச்சாச்சு இரை ரெடியா? வேட்டையன் ரஜினிகாந்தின் முக்கிய அப்டேட்டுங்கோ!..
Vettiyan:ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையின் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் உடனே ஒப்புக்கொண்ட திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தை டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கிறது. இப்படத்திற்கு மீண்டும் அனிருத் இசையமைப்பு செய்து இருக்கிறார். ஜெய்லரில் வெற்றி பெற்ற மல்டி ஸ்டார் கூட்டணி இப்படத்திலும் உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: எங்கேயும் ஓடி ஒளியவில்லை! பாலியல் புகார் பற்றி வாய் திறந்த மோகன்லால்..
ரஜினிகாந்த் உடன் ராணா ரகுபதி, பகத் ஃபாசல்,மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் நடித்து வருகின்றனர். மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தை ரஜினிகாந்த் விறுவிறுவென முடித்துக் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தை அக்டோபர் 10ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் கூலி திரைப்படத்தில் ரஜினி முழுமையாக இணைய இருப்பதால் வேட்டையன் டப்பிங் தற்போது முடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பிக்கு மாற்றாக மனோவை கொண்டு வந்த இளையராஜா!.. மாஸ்டர் பிளானா இருக்கே!…
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் ரஜினியின் மாஸ் பஞ்ச் டயலாக்கான குறி வச்சா இர விழனும் என்ற வசனத்துடன் முடித்துள்ளனர். இந்த டப்பிங்கில் சூப்பர் ஸ்டார் ரொம்பவே குஷியாக இயக்குனருடன் பேசும் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
கோட் திரைப்படத்தின் ரிலீஸ் ஆகி அப்டேட்கள் இணையத்தை பரபரப்பாக வைத்திருக்கும் நிலையில், சில நாட்களாகவே சூப்பர் ஸ்டாரின் அப்டேட் வரிசையாக வெளியாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக கூலி திரைப்படத்தின் அப்டேட் வெளியிடப்பட்ட நிலையில் வேட்டையன் படக்குழுவும் அப்டேட்களில் பட்டையை கிளப்பி வருகிறது.
ரஜினியின் டப்பிங் வீடியோவைக் காண https://x.com/LycaProductions/status/1829768925761954173