ஒரே வார்த்தை.! சரிங்க சாமி.! அடங்கிப்போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

Published on: February 4, 2022
rajini
---Advertisement---

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போதும் கூச்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரைப்பட வரலாற்றில் செய்த பல வசூல் சாதனைகள் இவரை உச்ச நட்சத்திரமாக மாற்றி உள்ளது.

rajini

தற்போது வரை தமிழில் நம்பர் ஒன் நடிகர் என்றால் அது ரஜினிதான் தான் அவரது இடத்தை பிடிக்க தான் மற்ற நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

annaatthe

இதற்கு அடுத்தாக ரஜினி எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. இதற்கிடையில், இவரது மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் விவாகரத்து அடுத்த ரொம்ப நொந்துபோய் விட்டார். தற்போது இவர், நெல்சனிடம் கதை கேட்டு ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. ஆம்.. அதற்கான எழுத்து வேலைகளில் நெல்சன் தீவிரமாக இறங்கிவிட்டாராம்.

இதனை தொடர்ந்து, இளையராஜாவின் தயாரிப்பில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி மீண்டும் இணையிருப்பதாக கோலிவுட் சினிமாவில் பேசப்படுகிறது. இதற்கு முன்னர், இளையராஜா ரஜினியை வைத்து கடந்த 1989-இல் “ராஜாதி ராஜா” போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினியின் இந்த புதிய படத்தை அவரே தயாரித்து இசையமைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கவிருக்கிறாராம். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், இளையராஜா பார்த்து ரஜினி எப்போதும்  சாமி என்று தான்  அழைப்பாராம். இந்த படத்தின் கதையை ரஜினிடம் இளையராஜா கூறிவிட்டு இந்த படத்தை நான் தயாரிக்கிறேன் என கூறினாராம், அதற்கு உடனே ரஜினி தனது பழைய பாணியில் சரிங்க சாமி என்று சொன்னாராம் என்று தகவல் கசிந்துள்ளது.

இதையும் படியுங்களேன்- கண்ணம்மா சீரியலை கண்டு ஓட்டம் பிடிக்கும் முக்கிய பிரபலங்கள்.! இதோடு 3வது ஆள்.!

மேலும், இப்படம் முன்பு இருந்த ஆக்சன், திரில்லர் படமாக இல்லாமல் சற்று வித்தியசமாக உருவாக இருப்பதாக பேசப்படுகிறது. மேலும், இந்த கூட்டணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment