லால் சலாம் ஓடிடிக்காக 'மரண' வெயிட்டிங்கில் ரசிகர்கள்... காரணம் என்ன?

by manju |   ( Updated:2024-08-29 07:26:22  )
லால் சலாம் ஓடிடிக்காக மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்... காரணம் என்ன?
X

#image_title

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அது குறித்து இங்கே நாம் பார்க்கலாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியான திரைப்படம் லால் சலாம்.

கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து உருவான இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களே பெற்றது.

இது மட்டும் இன்றி வசூலிலும் லால் சலாம் பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த லால் சலாம் செப்டம்பர் 20 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஆப்பில் வெளியாகிறது.

படம் வெளியான புதிதில் இப்படத்தின் ஓடிடி அப்டேட்டினை எதிர்பார்த்து ரசிகர்கள் வெகுவாக காத்திருந்தனர். ஆனால் அவர்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாக்கினார். மேலும் படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்து போய் விட்டது என்றும் தகவல்கள் வெளியாகின.

இதனால் நெட்டிசன்கள் லால் சலாம் ஓடிடிக்கு தவமாய் தவமிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் தற்போது லால் சலாம் இன்னும் மூன்று வாரங்களில் வெளியாகிறது. சிறந்த படங்கள் என திரையரங்கில் புகழப்படும் படங்களே, ரசிகர்களால் ஓடிடி தளங்களில் கழுவி ஊற்றப்படுகின்றன.

தனுஷ் நடிப்பில் வெளியான ராயன், கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படங்கள் சமூக வலைதளங்களில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன. அடுத்ததாக இந்த லிஸ்டில் லால் சலாம் படம் இணையலாம் என தெரிகிறது.

அதிலும் இப்படத்திற்கு என தனியான ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் படம் வெளியாகும் தினத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இப்படத்தினை மீம்ஸ் போட்டு தாளிக்க காத்திருக்கின்றனர். இதுபோல நேரலாம் என்று தெரிந்து தான் படத்தின் ஓடிடி ரிலீஸினை தள்ளிப்போட்டு வைத்திருந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி நடிப்பில் அடுத்ததாக வேட்டையன், கூலி திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் வேட்டையன் திரைப்படத்தை ஜெய்பீம் புகழ் ஞானவேலும், கூலி திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜும் இயக்கி வருகின்றனர்.

Next Story