Connect with us
BRR

Cinema History

பாலசந்தர் போன்ல பேசுனாருன்னா ரஜினியோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அது அபூர்வ ராகங்கள் படம். இந்தப் படத்தில் கமலும், ரஜினியும் இணைந்து நடித்திருப்பார்கள்.

முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் ரஜினி. அவருக்கும், பாலசந்தருக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு குறித்து தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடனான ஒரு நிகழ்ச்சியில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க… இந்த பாட்டாவது தேறுமா?!.. வெளியானது கோட் பட செகண்ட் சிங்கிள் அப்டேட்!..

ரஜினியோட வளர்ச்சி, அவரோட பிரச்சனை அது மட்டுமல்லாம ரஜினிக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா அடுத்த நிமிஷமே பாலசந்தர் வந்துடுவார். ஏன்னா யார் சொன்னாலும் கேட்காதவர் அவர் சொன்னா மட்டும் கேட்டுக்குவார்.

ரஜினியைக் கூப்பிட்டு ‘நீ இப்படி பண்ணு. இதை மாதிரி செய். அப்படி பண்ணினது சரியில்ல’ன்னு சொல்லிட்டாருன்னா உடனே கேட்டுக்குவார் ரஜினி. அதுக்கு மறுபேச்சே இல்லை. பாலசந்தரோட அறிமுகம் மட்டுமல்ல. இன்னைக்கு வாழ்க்கையில இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா அதுக்கும் அவர் தான் காரணம். அவரோட வாழ்க்கையில முக்கியமான மனிதர் பாலசந்தர்.

அதே மாதிரி ரஜினி பாலசந்தர் வர்றாருன்னா அவர் வீட்டுல கலாட்டாவே பண்ணிடுவார். பாலசந்தர் போன்ல பேசுறாருன்னா உட்கார்ந்த அவரு எழுந்து நின்னு ‘சொல்லுங்க சார்’னு பேசுவாருன்னு அவங்க மனைவியே சொல்லிருக்காங்க. அதுதான் ரஜினி. அதெல்லாம் அனிச்சைச் செயல் மாதிரி நடக்கும். அது எப்படி அபூர்வ ராகங்களோ அது மாதிரி அபூர்வமான உறவு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அபூர்வ ராகங்கள், குசேலன், அக்னி சாட்சி, நெற்றிக்கண், சிவா, ஸ்ரீராகவேந்திரா, வேலைக்காரன், நான் மகான் அல்ல ஆகிய படங்கள் ரஜினியை வைத்து தயாரித்தவர் பாலசந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் பாலசந்தர் தயாரிப்பில் வெளிவந்த படங்களே அதிகம்.

இதையும் படிங்க… என்னது… மகாராஜா படம் விஜய் சேதுபதிக்காக எழுதலயா…? டைரக்டரே இப்படி சொல்லிட்டாரே..!

ரஜினிகாந்த் கருப்பாக இருந்தாலும் அவரது பேச்சும், ஸ்டைலும் பிடித்து இருந்ததால் அவரைத் தன் படத்தில் நடிக்க வைத்தாராம் பாலசந்தர். அதன்பிறகு ரஜினி தனது அயராத உழைப்பினாலும், திறமையாலும் பல வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறி சூப்பர் ஸ்டாராக மாறி விட்டார்.

துவக்கத்தில் கமல் படங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்தை ஒரு கட்டத்தில் பாதையை மாற்றி தனியாக நடிக்கச் செய்தவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top