அட சான்ஸே இல்லப்பா...இப்படி ஒரு பெருந்தன்மையான நடிகரை நாம பார்த்திருக்கவே முடியாது...!

by sankaran v |   ( Updated:2022-10-31 12:16:59  )
அட சான்ஸே இல்லப்பா...இப்படி ஒரு பெருந்தன்மையான நடிகரை நாம பார்த்திருக்கவே முடியாது...!
X

Rajnikanth

ரஜினிகாந்த் எளிய மனிதர். பெருந்தன்மை மிக்கவர். சூப்பர்ஸ்டாராக இருந்த போதும் பழகுவதற்கு எளிமையானவர் என்று நமக்குத் தெரியும். இதை நிரூபிக்கும் வகையில் சினிமாவில் நடந்த சில சம்பவங்களைப் பார்க்கலாமா...

1980ல் எல்லாம் உன் கைராசி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜவஹர். அண்ணாமலை, முத்து படங்களிலும் அசோசியேட் டைரக்டர் அவர் தான். ரஜினியுடன் தனது அனுபங்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

எல்லாம் உன் கைராசி படத்தில் ரஜினிக்கு ரூ.3 லட்சம் சம்பளம். முத்து படத்தில் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம். சம்பளம் மட்டுமல்ல. அவரது புகழும் உயர்ந்துள்ளது. ஆனால் அவரது குணாம்சம் மட்டும் அப்படியே உள்ளது.

Ellam un kairasi

எல்லாம் உன் கைராசி படத்திற்காக ஸ்பெஷல் டிரஸ் தயாரித்தோம். காடசியும் படமானது. 6 மாதம் கழித்து 2ம் கட்டப் படப்பிடிப்பு. கதை கொஞ்சம் மாறியது. கிளைமாக்ஸ் காட்சியில் பைட். அந்த ஸ்பெஷல் டிரஸ் உடன் வருமாறு அழைத்தோம். முதல் காட்சியின் தொடர்ச்சி கிளைமாக்ஸ் ஆகிவிட்டது.

சண்டைக்காட்சி என்பதால் டூப்பாக நடிப்பவருக்கும் அதே டிரஸ் தேவை. நாங்கள் எவ்வளவோ முயன்றும் அதே டிசைனில் துணி கிடைக்கவில்லை. இதனால் டூப் நடிகருக்கு டிரஸ் தைக்க முடியவில்லை. நடிகர் ரஜினியும் வந்துவிட்டார். இந்தப்பிரச்சனையை அவரிடம் எப்படி சொல்வது? வேறு வழியில்லை என்று தெரிந்ததும்...அவரிடம் பிரச்சனையை சொல்லிவிட்டேன்.

முடிந்தவரை முயற்சி பண்ணுங்க. இல்லேன்னா பார்த்துக்கலாம் என்றார். பார்த்துக்கலாம் என்றால்? ஒருவேளை முதல் காட்சியையும் ரீஷ_ட் பண்ணச் சொல்வாரோ என்று சந்தேகப்பட்டு டைரக்டரிடம் சொன்னேன்.

டைரக்டர் எம்.ஏ.திருமுகம் யோசித்தார். என்ன தான் முடிவு? ரஜினிக்கு அந்த டிரஸ்சைப் போட்டு ஷாட்டுகளை எல்லாம் எடுத்து விடுவோம். பின்னர் டூப்புக்கு அதே டிரஸைப் போட்டு எடுப்போம் என்றார் டைரக்டர்.

முதலில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தோம். டூப் நடிகர் தூரத்தில் நின்று கொண்டு இருந்தார். டைரக்டரிம் ரஜினி ஏன் டூப் நடிகரின் ஷாட்டுகளை எடுக்கவில்லை என்று கேட்டார். விஷயத்தைச் சொன்னோம். அதற்கு ரஜினி நோ...நோ...டூப் நடிகரின் ஷாட்டையும் கூடவே எடுத்துருங்க...அதுதான் நல்லது என்று தன் டிரஸ்சைக் கழற்றி டூப் நடிகருக்கு மாட்டி விட்டார்.

டூப் நடிகரின் ஷாட்டுகளை எடுத்ததும் ரஜினி தானே அந்த நடிகரின் உடையைக் கழற்றி தனக்கு அணிந்து கொண்டார். இப்படியே இருவரும் மாறி மாறி ஒரே டிரஸ்சைப் போட்டு நடித்தார்கள்.

Annamalai

இதற்காக ரஜினி கோபப்படவோ, முகம் சுளிக்கவோ கூட இல்லை. அதுதான் அவரது பெருந்தன்மை என்றார். அதே போல படப்பிடிப்பில் தனக்கென ஸ்பெஷலாக சாப்பாடு கேட்க மாட்டாராம். கம்பெனியில் எல்லோருக்கும் என்ன சாப்பாடு கொடுக்கப்படுகிறதோ அதையே சாப்பிட்டுக் கொள்வார்.

அதே போல காட்சிக்கு வந்தால் அசோஸியேட் டைரக்டரை அழைத்து காட்சி, வசனம் பற்றித் தான் கேட்பார். அதே போல படப்பிடிப்பில் தனது ஐடியாக்களை டைரக்டரிடம் சொல்வார். அது டைரக்டருக்கு ஒத்து வரவில்லை என்றால் வாபஸ் வாங்கிக் கொள்வாராம். தன் கருத்தை திணிக்க மாட்டாராம்.

Next Story