ரஜினிகாந்தின் இன்டஸ்ட்ரி ஹிட் படங்கள் என்னென்ன?.. வசூல் எவ்வளவு தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரிய மாஸ் இருக்கும். அதனால் தான் இவர் இன்றளவும் உச்சநட்சத்திரமாகவே ஜொலிக்கிறார். இப்போது அவர் நடித்த படங்களில் இன்டஸ்ட்ரி ஹிட் என்னென்ன என்று பார்ப்போமா...

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் பதினாறு வயதினிலே 1977ல் வெளியானது. கமல், ரஜினி இணைந்து நடித்த படம். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தின் வசூல் ரூ.3 கோடி.

1980ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் முரட்டுக்காளை. இதன் வசூல் ரூ. 4.25 கோடி. 1985ல் வெளியான படிக்காதவன் படத்தில் ரஜினி, சிவாஜி இருவரும் இணைந்து நடித்தனர். ராஜசேகர் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வசூல் ரூ.6 கோடி.

1987ல் எஸ்.பி.முத்துராமன் வெளியான மனிதன் படத்தின் வசூல் ரூ.7.75 கோடி. 1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் தளபதி. ரஜினிகாந்த், மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த படம். இந்தப் படத்தின் வசூல் ரூ.14.75 கோடி. 1992ல் வெளியான ரஜினியின் சூப்பர்ஹிட் படம் அண்ணாமலை. ரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் வசூல் ரூ.17 கோடி.

1995ல் வெளியான சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் பாட்ஷா. ரூ.40 கோடி வசூலை அள்ளியது. வெளியான பெத்தராயுடு என்ற தெலுங்கு படம் ரூ.12 கோடி வசூலை ஈட்டியது.

Baasha

Baasha

1999ல் வெளியான படையப்பா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. இதன் வசூல் ரூ.61 கோடி. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்தப்படத்திலும் ரஜினி, சிவாஜி இணைந்து நடித்தனர். சிவாஜி கடைசியாக நடித்த படமும் இதுதான்.

2005ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் 90 கோடியை வசூலித்தது. 2007ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் சிவாஜி. இதன் மொத்த வசூல் ரூ.150 கோடி. 2010ல் அதே ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் எந்திரன். இதன் மொத்த வசூல் ரூ. 289 கோடி.

2016ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் கபாலி. இதன் மொத்த வசூல் 320 கோடி. 2018ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0 . இது ரஜினி நடித்த எந்திரன் படத்தின் 2வது பாகம். இதன் மொத்த வசூல் ரூ.272 கோடி.

 

Related Articles

Next Story