சூப்பர்ஸ்டார் ரஜினியின் முத்து படம் ஜப்பான் வரை சென்று ஹிட் அடித்தது. இப்படி ஒரு வரலாற்றுப் படம் தமிழ்த்திரை உலக சரித்திரத்திலேயே வந்தது இல்லை. படத்தின் சுவாரசியமே அதற்குக் காரணம்.
படத்தில் ஒரு பெரிய அரண்மனையைக் காட்டுவார்கள். அது லலிதா மகால். மைசூரில் உள்ள அரண்மனை இது. இங்கு ரஜினி நடித்த முத்து, லிங்கா, குருசிஷ்யன் ஆகிய படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. அதே போல கமல் நடித்த மீண்டும் கோகிலா, லாரன்ஸ் நடித்த சிவலிங்கா ஆகிய படங்களும் இங்கு தான் எடுக்கப்பட்டுள்ளன.
பிரம்மாண்டமான இந்த அரண்மனையைப் பார்க்கும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியாது. விஜய் நடித்த பிரியமானவளே, பிரசாந்த் நடித்த ஜோடி, கேஜிஎப் 1, கேஜிஎப் 2, போகன், காதலன், மதராசப்பட்டினம், ஆகா கல்யாணம், சந்தித்த வேளையிலே, மேட்டுக்குடி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி மற்றும் ஜெய்ஹிந்த் 2 படங்கள் என இந்தப் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கர்நாடக மாநிலம், மைசூர் சாமுண்டி மலை அருகில் தான் இந்த அரண்மனை உள்ளது. 1921ல் மைசூரை ஆண்ட நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையைக் கட்டி 100 வருடங்களுக்கும் மேலாகிறது.
ஆனாலும் இதன் கம்பீரம் கொஞ்சம் கூட குறையாமல் உள்ளது. இங்கு நுழைவுக்கட்டணமாக நபருக்கு 100 ரூபாய் வாங்குறாங்க. அதற்கு ஒரு ரசீது தருகிறாங்க. இதை உள்ளே கொண்டு போய் கொடுத்தால் ஒரு காபி, 2 பிஸ்கட் தர்றாங்க. இந்த மகால் இப்போது ஹோட்டலாக செயல்படுகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் பொல்லாதவன் படத்தில் இந்த அரண்மனையைக் காட்டுவார்கள். மாவீரன் படத்திலும் இந்த அரண்மனையைக் காட்டுவாங்க.
பணத்தைக் கொடுத்து என்னை வாங்கப் பாக்குறாங்க…நான் விலைக்குப் போற ஆள் இல்லேன்னு அவங்களுக்குத் தெரியாதுன்னு ஸ்டைலாக ரஜினி தலைமுடியைக் கோதிவிட்டு சொல்வார். இந்தக் காட்சி மாவீரன் படத்துக்காக இந்த அரண்மனையினுள் உள்ள படிக்கட்டின் அருகில் தான் எடுத்து இருப்பார்கள்.
பாபா படத்தில் வரும் பாபா பாடலில் இந்த அரண்மனை வரும். சந்திரமுகி படத்தில் வரும் தேவுடா தேவுடா பாடலும் இங்கு தான் எடுக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா படத்தில் குமாரசாமி செட்டியார் பங்களாவாக இந்த அரண்மனையைத் தான் காட்டியிருப்பாங்க.
கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் வீடாக இந்த அரண்மனையைக் காட்டுவாங்க. மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக படத்தில் இந்த அரண்மனையை நல்லா காட்டுவாங்க.

விக்ரம் நடித்த கிங் படத்தில் சகியே போகாத பாடலிலும், விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் உனக்கென உனக்கென பிறந்தேனே பாடலிலும் இந்த அரண்மனை வரும். ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு இந்த அரண்மனை வரும். விஜயகாந்த் நடித்த காலையும் நீயே..மாலையும் நீயே படத்தில் இந்த அரண்மனை தான் வரும்.
