‘வணங்கான்’ படப்பிடிப்பின் போது தாக்குதல்!.. போலீஸிடம் தஞ்சம் புகுந்த பாதிக்கப்பட்ட நடிகை..
நீண்ட இழுபறிக்கு பிறகு பாலாவின் ‘வணங்கான்’ படப்பிடிப்பு கன்னியாகுமரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக சூர்யா நடிக்க இருந்த இந்தப் படம் சில பல பிரச்சினைகளால் அப்படியே நின்று போனது. எப்படியும் மறுபடியும் சூர்யா , பாலா இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் படம் டிராப் ஆனது.
எற்கெனவே சூர்யா நடிக்க 2டி எண்டர்டெயிண்ட் நிறுவனம் தான் படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா படத்தில் இருந்து விலக அந்த நிறுவனமும் வணங்கான் படத்தை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டது. மீண்டும் அதே பெயரில் மீண்டும் பாலா அந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
சூர்யாவுக்கு பதில் இந்த வணங்கான் படத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்கிறார். சூர்யாவுடன் கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக இருந்தது. அவரும் விலக இப்பொழுது அவருக்கு பதிலாக ஹீரோயினாக ரோஷினி நடிக்கிறார். கன்னியாகுமரியில் அருண்விஜய், ரோஷினி நடிக்க வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் படத்தில் துணை நடிகர்கள், துணை நடிகைகள் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டு படத்தில் நடித்துக் கொண்டு வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஜித்தின் என்பவர் கவனித்து வருகிறார்.
பாதி நாள்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அவர்களுக்கு உண்டான சம்பளத்தை ஒருங்கிணைப்பாளர் ஜித்தின் தரவில்லையாம். அதனால் துணை நடிகை லிண்டா என்பவர் ஜித்தினிடம் தங்களுக்கு தர வேண்டிய சம்பளத்தை கேட்டிருக்கிறார்.
ஆனால் அவர் தர மறுத்ததால் இருவருக்குமிடையே கடும் வாக்கு வாதம் வந்து பின்னர் அது கைகலப்பில் போய் முடிந்திருக்கிறது. அதில் நடிகை லிண்டா கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இதனால் லிண்டா போலீஸிடம் சென்று ஒருங்கிணைப்பாளர் ஜித்தின் மீது புகார் அளித்துள்ளாராம். இப்போது இந்த செய்தி தான் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க : ஏகே 62 இவ்ளோ கோடி பட்ஜெட்டா?.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைக்கப் போகும் அஜித்..