அந்தப் படத்தோடு ரைட்ஸ் மட்டும் கிடைக்கட்டும்.. அஜித்த வச்சு சம்பவம் செய்ய காத்திருக்கும் இயக்குனர்

ajith
Ajith: சினிமாவில் ஒரு காலகட்டம் வரை ஆண் இயக்குனர்கள் தான் கோலோச்சி இருந்தார்கள். அதன் பிறகு பெண்களாலும் பல நல்ல படைப்புகளை கொடுக்க முடியும் என்பதை சமீபகாலமாக நிரூபித்து வருபவர்கள் சுதா கொங்கரா ,புஷ்கர் காயத்திரி போன்ற இயக்குனர்கள். ஓரம்போ, குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா ஆகிய படங்களை இயக்கியவர்கள் தான் கணவன் மனைவியும் ஆன புஷ்கர் காயத்ரி.
படங்கள் மட்டுமல்ல வெப் தொடர்களையும் இவர்கள் இயக்கி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான சுழல் 2 தொடர் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து இவர்கள் ஒரு படம் எடுக்க போவதாக சில வதந்திகள் பரவி வந்தன. இதைப் பற்றி புஷ்கர் காயத்ரியிடம் கேட்டபோது தங்களிடம் அடுத்த படத்தின் திரைக்கதை தயாராக இருக்கிறது.
இதுவரை எடுக்கப்படாத ஒரு வகையான கதை. அஜித்துடன் பணியாற்ற எங்களுக்கு ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி எதுவும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறியிருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்திய ஒரு விழா மேடையில் புஷ்கர் காயத்ரியிடம் மீண்டும் அஜித்தை பற்றிய ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில திரைப்படம் தி டார்க் நைட்.
அந்த படத்தின் காப்பி ரைட்ஸ் ஒரு வேளை உங்களுக்கு கிடைத்தால் அதில் எந்த நடிகரை நடிக்க வைப்பீர்கள் என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புஷ்கர் காயத்ரி சற்றும் யோசிக்காமல் அஜித் என பதிலளித்தார். இந்த பதிலை கேட்டதும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் கத்த ஆரம்பித்து விட்டனர். டார்க் நைட் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இது பேட் மேனின் திரைப்பட தழுவல் ஆகும்.

2005இல் வெளியான பேட்மேன் பிகின்ஸின் தொடர்ச்சியாக இந்த படம் வெளியானது. இது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாகும் .அதனால் இந்த பேட்மேன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என புஷ்கர் காயத்ரி அந்த மேடையில் கூறியிருந்தார்.