உறுதியான கூட்டணி! அஜித்தின் கெரியரை வேற லெவலுக்கு கொண்டு போகப் போகும் அந்த இயக்குனர்

ajith
Actor Ajith: கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். நடிகர் என்பதையும் தாண்டி ஒரு புரியாத மனிதர் என்ற பெயருக்கு சொந்தக்காரராகவும் வலம் வருகிறார். ஏனெனில் அவரை சுற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் அது எதற்கும் அஜித் தலை சாய்வதில்லை. இருந்தாலும் அவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் இந்தளவு அஜித் மீது அலாதி அன்பு வைத்திருந்தாலும் அஜித் அவர்களை சந்திக்கிறாரா என்றால் இல்லை.
இதையும் படிங்க: கோடிகளை கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்!. விஜயகாந்த் ஃபாலோ பண்ண 5 விஷயங்கள்..
அப்படி இருக்கும் போது எப்படி அஜித் மீது இவ்வளவு பாசத்தை ரசிகர்களால் கொடுக்க முடிகிறது என்ற ஒரு ஆச்சரியத்தைத்தான் வரவழைக்கிறது. தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில்தான் நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைய இருக்கிறார். இது சம்பந்தமாக பூஜையே முடிந்துவிட்டது. அதனால் ஆதிக் -அஜித் கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது. இதற்கு அடுத்தப்படியாக வெற்றிமாறனுடன் கூட்டணி என்ற செய்தி வர அது எந்தளவுக்கு உண்மை என போகப் போகத்தான் நமக்கு தெரியவரும்.
இதையும் படிங்க: மாமா வருவாரா? மாட்டாரா? ரொம்ப ஜவ்வா இழுக்குறாங்களே!… விஜயா பல்ப் வாங்குனா எப்படி இருக்கும்?
இந்த நிலையில் கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீலும் அஜித்தும் சேர இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அது சம்பந்தமாக இன்று இணையத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. பிரசாந்த் நீல் ஜுனியர் என்.டி.ஆரின் 31வது படத்தையும் அடுத்ததாக கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தையும் அதற்கு அடுத்த படியாக சலார் இரண்டாம் பாகத்தையும் முடித்த பிறகு அஜித்துடன் கூட்டணி வைப்பதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.
அதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அஜித்தின் கெரியரில் பிரசாந்த் நீல் படம் மிக முக்கிய படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் கேப்டன் செய்த செயல்.. கண்ணீர் மல்க கூறிய மகன்