100% ரெடியா இருங்க.. அம்மணியின் அரசியல் பிரவேசம்!.. திரிஷாவின் ஜாதகத்தை கணித்த பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளையும் கடந்து மக்கள் மனதில் கொடி கட்டி பறக்கும் நடிகை திரிஷா. சுமார் 10 வருடத்திற்கு முன் இவர் தான் அனைத்து முன்னனி நடிகர்களுக்கும் ஏற்ற நாயகியாக வலம் வந்தார்.
அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, என முன்னனி நடிகர்களுடன் ஒரு ஆட்டம் போட்டு தன் ஆட்டத்தை காட்டியவர் திரிஷா. இவரின் பெரும்பாலான படங்கள் ரசிக்கும் படியாகவும் வெற்றிப்படங்களாகவும் அமைந்திருக்கின்றன. மேலும் காலப்போக்கில் நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகளின் வரவால் திரிஷாவின் மார்க்கெட் கொஞ்சம் சரிய தொடங்கியது.
அதுமட்டுமில்லாது அவரது நிச்சயதார்த்த பிரச்சினையாலும் திரிஷா சிறிது காலம் மன உளைச்சலில் இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் மீண்டும் சினிமாவில் மறுபிறவி எடுத்திருக்கிறார் திரிஷா. தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை ஆட ஆரம்பித்திருக்கிறார்.
பொன்னியின் செல்வனில் அனைவரையும் கவர்ந்திழுத்தார். அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் விஜயின் ஹீரோயினே திரிஷா தான். அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் அடுத்தப்படத்திற்கும் இவர் தான் என்றும் சொல்லுகின்றனர்.ஆரம்பத்தில் ஜோடி படத்தில் சிம்ரனுக்கு கல்லூரி தோழியாக நடித்திருப்பார் திரிஷா.
அது தான் அவர் முதலில் திரையில் தலையை காட்டிய படம். அப்போதே அவர் பெரிய ஆளாக வருவார் என்று ஜோடி பட இயக்குனர் பிரவீன் காந்தி கூறினார். ஏனெனில் திரிஷா குடும்பம் பிரவீன்காந்திக்கு மிக நெருக்கமாக இருந்ததாம். அந்த வகையில் ஒரு சமயம் பிரவீன் காந்தி திரிஷா வீட்டிற்கு சென்றிருக்கிறார். பிரவீன் காந்திக்கு ஜோசியம் நன்றாக தெரியுமாம்.
உடனே திரிஷாவின் நிலைமையை அறிய திரிஷாவின் ஜாதகத்தை பிரவீன் காந்தியிடம் காண்பித்திருக்கின்றனர். பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டாராம் இயக்குனர். ஏனெனில் சினிமாவையே தன் கையில் வைத்திருக்கும் ஒரு நிலையில் திரிஷா வருவார் என்றும் அதன் பிறகு அரசியலிலும் ஜொலிப்பார் என்றும் ஜாதகத்தில் சொல்கிறது என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.
இதைப் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட திரிஷா 100 சதவிகிதம் அரசியலுக்கு வருவார் என்று கூறினார். இதன் அடித்தளமாகவே இடையில் ஒரு கிசுகிசுக்கள் வந்தன. காங்கிரஸில் இருந்த குஷ்பு விலகியதால் அந்த இடத்தை நிரப்ப திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றெல்லாம் வதந்திகள் வந்தன. ஒரு வேளை கூடிய சீக்கிரம் நடக்குமா இல்லையா என்று பார்ப்போம்.